தவெக அரசுக்கு முதல் அடி! போராட்ட களத்திற்கு வந்த தோழமை கட்சி! விஜய் முழிக்குறாரே!
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் அக்கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் (SFI) ஆகியவைக்கு எதிராக தமிழக அரசு சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து.. தலைமை செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்-ஐ மாற்ற கோரி சிபிஎம் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியிருக்கிறது.
தவெக ஆட்சியமைக்க சிபிஎம் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்திருந்தது. இருப்பினும் இக்கட்சியை ஒடுக்கும் வேலையில் தவெக அரசு மும்முரமாக ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அந்த வகையில், தற்போது தவெக அரசுக்கு எதிரான தனது போராட்டத்தை சிபிஎம் அறிவித்திருக்கிறது. கூட்டணியில் இருக்கும் கட்சியே.. அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்த இருப்பது விஜய்க்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல் பஞ்சாயத்து
திண்டுக்கல் மாவட்டத்தில் சிபிஎம்-க்கு ஒரு எம்பி இருக்கிறார். மாவட்டத்தில் கட்சி சொல்லிக்கொள்ளும் செல்வாக்குடன்தான் இருக்கிறது. இருந்தும் கூட.. கட்சி குறித்து மாவட்ட நிர்வாகம் போட்ட உத்தரவு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
"திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகயவற்றை சேகரித்து வருாவய் ஆய்வாளர்கள் வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட அறிவுறுத்தப்படுகிறது. அறிக்கை அளிக்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என உத்தரவு வெளியாகியிருந்தது.
சர்ச்சை உத்தரவு
இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், உத்தரவு திரும்பப்பெறப்பட்டு.. உத்தரவு போட்ட வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சரி பிரச்சனை இதோடு முடிந்தது என்று பார்த்தால்.. அங்குதான் டிவிஸ்ட்! அடுத்த சில மணி நேரத்தில் SFI குறித்த புதிய உத்தரவு கல்லூரி கல்வி இயக்ககத்திலிருந்து வெளியானது.
மாணவர்களுக்கு எதிரான உத்தரவு
அதில், "இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில் பள்ளி கல்வி, உயர் கல்வி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளுக்கு இடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மிக அவசரம்
எனவே மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்கிற விவரத்தை உடன் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது மிக அவசரம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவும் இடதுசாரி கட்சிகளை கடுமையாக சீண்டியிருக்கிறது.
சிக்கலில் விஜய்
இப்படியான உத்தரவுகள் முதலமைச்சர் கவனத்திற்கு வராமல் எப்படி பிறப்பிக்கப்பட்டிருக்க முடியும்? இதற்கு முழு காரணம் தலைமை செயலாளர்தான். எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை முன் வைத்து இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது.
இந்த போராட்டம் விஜய் தலைமையிலான அரசுக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது. என்னதான் விஜய்க்கு ஆதரவளித்தாலும்.. அக்கட்சியின் ஆட்சியை எதிர்த்து சிபிஎம் போராட்டத்தை அறிவித்திருப்பது.. விஜய்க்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், தமிழகத்தின் தலைவர் செயலாளர் சாய் குமார், இந்த பதவியில் நீடிக்க தகுதியற்றவர். அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
