கலாஷேத்ரா மீது பாலியல் புகார்- மாநில அரசு நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்- நிர்வாகம் மறுப்பு!
சென்னை: புகழ்பெற்ற சென்னை கலாஷேத்ரா பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாகவும் இது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. ஆனால் கலாஷேத்ரா நிர்வாகம் இத்தகைய புகார்களை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய கலாச்சார துறையின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் கலாஷேத்ரா ருக்மணிதேவி கவின் கலை கல்லூரி திருவான்மியூரில் செயல்படுகிறது. இங்குள்ள முக்கிய நபர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தகவல்களை மாணவிகள், இணையம் வழியாக ரகசியமாக பகிர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் பகிரப்பட்ட இச்செய்திகளை கொண்டு 'பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013'ன் படி, கலாஷேத்ராவில் அமைக்கப்பட்டுள்ள, உள் புகார் குழு (ஐசிசி) தாமாக முன்வந்து விசாரித்துள்ளது. ஒருதலைபட்சமாக அவசர அவசரமாக புகாரை விசாரித்த அந்தக்குழு, பாலியல் புகார்கள் பொய்யானவை என்றும், கலாஷேத்ராவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்குடன் கட்டமைக்கப்பட்டவை என்றும் கூறி விசாரனையை முடித்துள்ளது.
பாலியல் புகார்கள் குறித்து மாணவர்கள் யாரும் இனி பேசவோ, இணையத்தில் பகிரவோ கூடாது என்று கலாச்ஷேத்ரா நிர்வாகம் கட்டளையிட்டுள்ளது. "பத்தாண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் அங்குள்ள மாணவ மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக" கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், ஏதோ நிர்பந்தத்தால் உடனடியாக அந்த பதிவை அவர் நீக்கியுள்ளார். இதுபோன்ற விஷயங்கள் பாலியல் புகார்கள் மீதான சந்தேகங்களை மேலும் கூடுதலாக்குகிறது.

கலாஷேத்ரா நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்படவேண்டும் என்று அங்கு பயிலும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் என 600 க்கும் மேற்பட்டோர் கையொப்பம் இட்ட மனுவும் இணையவாயிலாக வெளிவந்துள்ளது.
எனவே, ஒன்றிய அரசின் நிதியில் செயல்படும் கல்வி நிறுவனமாக கலாஷேத்ரா இருந்தாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு என்ற வகையில் மாநில அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை உயர் அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் இவ்விசாரணையை மேற்கொள்ள வேண்டும். மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். இவ்வாறு ஆர்.வேல்முருகன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார்களை கலாஷேத்ரா நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக கலாஷேத்ராவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில், கடந்த சில மாதங்களாக கலாஷேத்ரா அறக்கட்டளை மீது சமூக வலைதளங்களில் வதந்திகள், அவதூற்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கலாஷேத்ராவில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாக திட்டமிட்டு இத்தகைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. இத்தகைய அவதூறுகளைப் பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications