"சட்டம் ஒழுங்கு பற்றி வெறும் விளக்கம் கொடுத்தால் போதாது”.. தவெக அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் குரல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தவெக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு, மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை வழங்கிட தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன் வண்ணாந்துறை பகுதியில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CPI Urges Tamil Nadu Government to Ensure Public Safety After TVK Functionary s Murder

இந்த படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். நாளை சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் பதில் அளிக்க உள்ள நிலையில், தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தவெக அரசு ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ள கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளது. மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை அடையாறு வண்ணாந்துறையில் ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். இது மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயுதங்களுடன் கும்பல்கள் சுதந்திரமாகச் செயல்படுவது காவல்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கிறது. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

காவல்துறை, குற்றம் நடந்த பின்னர் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது மட்டும் போதாது. குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்கை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

தமிழக அரசு சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்து வெறும் விளக்கங்களை மட்டுமே அளித்து வருவதை விட்டுவிட்டு, மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து போக்க வேண்டும்.

போதை மற்றும் மதுக் கலாசாரத்திற்கு தீர்வுகாண வேண்டும்.
போதை மற்றும் மதுக் கலாசாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை மாநிலம் தழுவிய முறையில் தமிழ்நாடு அரசே நடத்திட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+