13 கோடி பேரின் வாக்குரிமையை பறித்தவர் ஞானேஷ்குமார்.. வீரபாண்டியன் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்ஐஆர் முறைகேடு விவகாரம் நாட்டில் புயலை கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது, தேர்தல் ஆணையர்களே குற்றம் சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஞானேஷ் குமார் 13 கோடி பேரின் வாக்குரிமையை பறித்துள்ளார் என்று சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. போரை நாம் வேடிக்கை பார்க்க கூடாது. போரை நிறுத்தி, அங்கே சமாதான உரையாடல்களுக்கு வழிவகைகளை உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செய்ய வேண்டும். வளைகுடாவில், மேற்கு ஆசியாவில் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள், தமிழர்கள் வாழ்கிறார்கள். போர்ச்சூழலில் அவர்களை பத்திரமாக மீட்க வேண்டிய பணியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும்.

cpi-veerapandiyan-slams-eci-and-central-government-over-sir

ஜனநாயக படுகொலை

நாடாளுமன்றத்தில் போரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 13 கோடி பேரின் வாக்குரிமையை பறித்துள்ளார். இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். ஜனநாயக படுகொலை. இதற்கு தலைமை தேர்தல் ஆணையர் மட்டும் பொறுப்பல்ல. நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரும் பொறுப்பு. வாக்கு சீட்டு ஒன்று தான் அரசியல் சமத்துவம். அரசியல் ஜனநாயகம்.

இந்தியாவில் அரசியல் ஜனநாயகம் இல்லை. பொருளாதார ஜனநாயகம் இல்லை. நம்மிடம் உள்ள வாக்குச்சீட்டில் தான் பொருளாதாரம், ஜனநாயகம் உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் ஜனநாயகமே வாக்குச்சீட்டு தான். இதை பறிப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் படுகொலை. இதை எதிர்த்து போராடும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கைது செய்கிறார்கள். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த படுகொலையை நிகழ்த்தியவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

தொன்மை நாகரீகம்

ராகுல் காந்தி போராடியது சரி. அவரை கைது செய்தது கண்டனத்திற்குரியது. தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா உள்ளத்தில் இருந்து பேசியுள்ளார். எனவே உள்ளத்தில் இருந்து வந்த அவரின் வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டும். அந்த வீடியோவை மறுக்க அவருக்கு உரிமை உண்டு. ஆய்வில் எது உண்மை என தெரியவரும். உலகின் மிகப்பெரிய நாகரீகத்தை கொண்டுள்ளது தமிழகம். உலகிலேயே தொன்மை நாகரீகத்தை கொண்டது தமிழ்நாடு.

போருக்கு எதிராக தமிழகம் முழுங்கியுள்ளது. உலகிலேயே யாரும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னது தமிழ்நாடு. போரை நிறுத்துங்கள்.. அமைதி பேச்சுவார்த்தை நடத்துங்கள். அங்குகள்ள தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என நம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதை முதல்வர் செய்ய வேண்டுமென சிபிஐ சார்பில் கோரிக்கை வைக்கிறோம். வருகின்ற தேர்தல் கம்யூனிஸ்ட்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+