மார்க்ஸ் சர்ச்சை.. பிப்.28ல் ராஜ்பவன் முன் கருப்புக் கொடி போராட்டம்.. சிபிஎம் பாலகிருஷ்ணன் அறிவிப்பு
பிப்.28ல் ஆளுநர் மாளிகை முன் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று சிபிஎம் அறிவித்துள்ளது.
சென்னை: மார்க்சியம் பற்றி அவதூறாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சைக் கண்டித்து ராஜ்பவன் முன் பிப்.28ம் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதேபோல் ஆளுநர் செல்லும் இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இரு நாட்களுக்கு முன் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கார்ல் மார்க்ஸ் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், இந்தியா சாதி, இனம் என பிளவுப்பட்டுள்ளது. கடந்த 7 தலைமுறைகளை கடந்து வறுமை, பசி, ஆரோக்கியமின்மை, கல்வியின்மை நிலை ஆகியவற்றை ஒழிக்க முடியாமல் உள்ளோம்.
இதற்கெல்லாம் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய மனநிலையை பின்பற்றுவதே காரணம். 75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கும் அதுவே காரணம். கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது. இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்
இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், கார்ல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்து இருந்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சி எம்பி மாணிக்கம் தாகூர்-ம் கண்டனம் தெரிவித்திருந்தார்.

கருப்புக் கொடி போராட்டம்
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ராஜ் பவன் முன் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநரின் அடாவடித்தனமான பேச்சு!
ஆர்.என். ரவி செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி காட்டும் போராட்டம். முதல் கட்டமாக பிப்ரவரி 28 அன்று ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி போராட்டம்.

பாலகிருஷ்ணன் விமர்சனம்
தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து, இப்போது மார்க்சையும், டார்வினையும் கடிக்க ஆரம்பித்திருக்கிறார். செக்கு என்றும், சிவன் என்றும் தெரியாமல் நடந்து கொள்வதைப் போல ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார். அறிவில் அந்நிய அறிவு, உள்ளூர் அறிவு என்றும் கிடையாது.

உதவாக்கரை தத்துவம்
சொல்லப்போனால் ஆர்.என்.ரவி அவர்களின் ஞான பீடம் ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே நாடு என்கிற உதவாக்கரை தத்துவத்தையும், சாகாவையும் பாசிஸ்ட் முசோலினியிடமிருந்தும், கொடி வணக்கம், மார்பில் கை வைத்து வணங்கும் முறை, சுவஸ்திக் ஆகியவற்றை ஹிட்லிரிடமிருந்தும் கடன்பெற்றுக் கொண்ட அமைப்பு. இன அழிப்புக் கொள்கைக்கு ஹிட்லரை முன்னோடியாக கொள்ள வேண்டும் என ஜெர்மன் நாஜியை குருவாக ஏற்றுக்கொண்ட அமைப்பு.

ஆளும்வர்க்க ஏஜெண்ட்
தத்துவம், நடைமுறை என அனைத்தையும் ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிக் கொண்ட ஆர்எஸ்எஸ் சார்ந்த ஆர்.என். ரவி மார்க்சியத்தை அந்நிய தத்துவம் என்று பேசுவது அறியாமையையே காட்டுகிறது. மனித குல வரலாற்றில் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல், ஒடுக்குமுறை கொடுமைகளில் இருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டு சுரண்டலற்ற பொதுவுடமை சமூகத்தை அமைக்க வழிவகுக்கும் மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார்.

மார்க்சியம் நோக்கம்
மார்க்சியம் இந்தியாவை சிதைத்து விட்டது என்று பேசுகிறார். பெருநோய்களை சிதைக்கும் தடுப்பு மருந்துகளை தவறானது என்று யாரும் பேச மாட்டார்கள். உலகத்தை அதன் அனைத்து விதமான கோரங்களிலிருந்தும் மீட்டெடுத்து அனைவருக்குமான பூமியாக மாற்றுவதே மார்க்சியத்தின் நோக்கம். அது சிதைக்கும் தத்துவமல்ல. அது செதுக்கும் தத்துவம். அறிவுச் சிதைவு ஏற்பட்டவர் மட்டுமே அதை சிதைக்கும் தத்துவமாக கருதுபவர்கள்.

கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு
ஆர்.என். ரவி அரசு அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அடாவடித் தனமாகவும், பொருத்தமற்ற முறையிலும் பேசுவதை கண்டித்தும், மார்க்சியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications