இந்த பிரைவேட் காலேஜை உடனே அரசு கண்ட்ரோல்ல எடுங்க.. முதல்வருக்கு சிபிஐஎம் கோரிக்கை.. என்ன காரணம்?
சென்னை : சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அரசு விதிகளை மீறி அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதால் ஏழை, எளிய மாணவர்கள் அந்தக் கல்லூரியில் சேர முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் டி.பி.ஜெயின் கல்லூரியை ஒரு தனி அலுவலரை நியமித்து, அரசின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி தமிழக அரசே இக்கல்லூரியை ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தனியார் கல்லூரி
கே.பாலகிருஷ்ணன் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரி கடந்த 50 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு உயர்த்தி, சுயநிதி பிரிவுக்கு இணையான கட்டணத்தை வசூலிக்கிறது. கடந்த 2020-21 முதல் அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

சட்ட விரோதம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவி பெறும் பிரிவில், பணி நிறைவு பெறும் பேராசிரியர்களின் இடத்தில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதையும் நிறுத்திவிட்டது. இதுபோல, அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்த 11 பேராசிரியர்களை 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்துள்ளது.

ஏழை மாணவர்கள் சேர முடியவில்லை
அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று கல்வி நிறுவனம் தொடங்கி, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொண்டு அதை அப்படியே சுயநிதி கல்லூரியாகவே மாற்றி செயல்படுத்தி வருகிறது. அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதால் அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகளில் அப்பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் சேர முடியவில்லை.

கண்காணிக்க வேண்டும்
எனவே, தாங்கள் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1976-ன் 14 (அ) பிரிவை பயன்படுத்தி, ஒரு தனி அலுவலரை நியமித்து, அரசின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி தமிழக அரசே இக்கல்லூரியை ஏற்று நடத்த வேண்டும். மேலும், இதுபோன்று தமிழகம் முழுவதும் இயங்கும் 250 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா, அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications