கம்யூனிஸ்ட்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? - முதலமைச்சர் விஜய்க்கு சிபிஐஎம் சண்முகம் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடரப் போகிறீர்களா? என்று முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் ஆதரவால்தான் தவெக ஆட்சி நடக்கிறது. தலைமைச் செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். விவரம் தெரியாதவரை ஏன் தலைமைச் செயலாளராக்குகிறீர்கள்? அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடரப் போகிறீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

shanmugam cpim vijay tvk

இடது​சாரி கட்​சிகள், கரப்​பான் பூச்சி கட்சியினர் நடந்​தும் போராட்​டங்​களில் மாணவர்​கள் பங்​கெடுப்​பதை தடுக்​கும் வகை​யில் பள்​ளிக்​கல்​வி, உயர்​கல்​வி, காவல்​துறை, மாவட்ட நிர்​வாகம் இடையே ஒருங்​கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு கல்​லூரிக் கல்வி இயக்​குநர் சுற்​றறிக்கை அனுப்​பி​யது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், குஜிலியம்பாறை வட்டாட்சியர், இடதுசாரிகளை கணக்கெடுக்க உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரங்கள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டனப் போராட்டத்தை நடத்தி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சென்னையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் பெ. சண்முகம் தலைமை தாங்கினார்.

சென்னையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் பெ. சண்முகம் பேசுகையில், "இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கவும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை ஒடுக்கவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி, தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் அடிப்படையில், கல்லூரி கல்வி ஆணையர் மற்றும் உயர்கல்வித்துறைச் செயலாளர் ஆகியோர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்றதொரு சம்பவம் இந்தியாவிலேயே வேறு எங்கும் நடைபெற்றது இல்லை. தலைமைச் செயலாளரின் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது. ஜனநாயகத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமாகச் செயல்படும் அவர், தலைமைச் செயலாளர் என்ற உயர் பதவியில் நீடிப்பதற்கு தகுதியுமற்றவர். ஆகவே, தமிழக அரசு உடனடியாக அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் ஆதரவால்தான் தவெக ஆட்சி நடக்கிறது. எங்கள் ஆதரவுடன்தான் தவெக ஆட்சி நடப்பது அதிகாரிகளுக்கு தெரியாதா?
தவெக அரசுக்கு நாங்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? அதிகாரிகள் தமிழக அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்களா? அல்லது அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டுள்ளதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+