மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. கந்தர்வகோட்டையில் தற்போது எம்.எல்.ஏ ஆக உள்ள சின்னதுரைக்கு அதே தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

CPIM

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி, சசிகலா - ராமதாஸ் அணி என 5 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிகளை உறுதி செய்து பிரச்சாரத்தை துவங்கி விட்டது. திமுக கூட்டணி தொகுதிகளை பங்கீடு செய்து, வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தொகுதிகள் எவை எவை என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பழனி, கந்தர்வக்கோட்டை, பத்மநாபபுரம், திருவொற்றியூர் மற்றும் கீழ்வேளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் சிபிஐஎம் மாநிலக் குழு ஈடுபட்டது.

CPIM Releases Candidate List for 5 Seats Chinnadurai Renominated

இந்நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பழனி - என் பாண்டி, கந்தர்வக்கோட்டை - எம். சின்னதுரை, பத்மநாபபுரம் - ஆர். செல்லசுவாமி, திருவொற்றியூர் - எல். சுந்தரராஜன், கீழ்வேளூர் - டி. லதா ஆகியோரை வேட்பாளர்களாக என சிபிஎம் அறிவித்துள்ளது.

CPIM Releases Candidate List for 5 Seats Chinnadurai Renominated
CPIM

சிபிஐஎம் வேட்பாளர்கள்

திருவொற்றியூர் - எல்.சுந்தரராஜன்
கீழ்வேளூர் - டி.லதா
கந்தர்வகோட்டை - எம்.சின்னதுரை
பத்மநாபபுரம் - ஆர். செல்லசுவாமி
பழனி - என்.பாண்டி

கந்தர்வகோட்டை தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ ஆக உள்ள சின்னதுரைக்கு அதே தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 4 தொகுதிகளிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+