சென்னை ஏர்போர்ட் தனியார்மயம்? எல்லாம் முன்கூட்டியே பேசி வைத்தது போலும்! விஜய்யை விமர்சித்த அருணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய், ரகசிய கடிதம் எழுதியிருந்த நிலையில் "விஜய்யின் இந்த ஆசையை மட்டும் பிரதமர் உடனடியாக நிறைவேற்றிவிட்டாரே, எல்லாம் முன்கூட்டியே பேசி வைத்தது போலும்" என பேராசிரியரும், மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகியுமான அருணன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வர் விஜயின் இந்த ஆசையை மட்டும் உடனடியாக நிறைவேற்றுகிறாரே பிரதமர் மோடி? எல்லாம் முன்கூட்டியே
பேசி வச்சது போலும்! என தெரிவித்துள்ளார்.

chennai airport centre

சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் சேவை தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி இரு முக்கிய விமான நிலையங்களையும் பொது- தனியார் பங்களிப்பு முறையின் கீழ் கொண்டு வர விமான போக்குவரத்து அமைச்சகம் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

எந்தெந்த விமான நிலையம்?

டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய முன்னணி நகரங்களின் விமான நிலையங்கள், ஏற்கெனவே தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களையும் அந்த பட்டியலில் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை (long term lease) அடிப்படையில் விமான நிலையங்களை ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான வசதி

சென்னை விமான நிலையத்தின் சேவைத் தரம், பயணிகளுக்கான வசதி, விமான போக்குவரத்து, சரக்கு கையாளும் திறன் உள்ளிட்டவைகளை சர்வதேச அளவிற்கு மேம்படுத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ரகசிய கடிதம்

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு விஜய் ரகசிய கடிதம் எழுதியிருந்தாராம். அதில் "சென்னை சர்வதேச விமான நிலையம் மோசமான செயல்பாடுகளை உங்களுக்கு கொண்டு வரவே நான் கடிதத்தை எழுதுகிறேன். சென்னை விமான நிலையம் கடினமான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஏப்ரல் 2026 நிலவரப்படி, பயணிகளின் வருகையில் கொல்கத்தாவிற்கு பின் 6-வது இடத்திற்கு சென்னை விமான நிலையம் சரிந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் தற்போதைய பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 2.7 கோடியாக உள்ளது.

புகார்கள்

435 விமானங்களை கையாளும் நிலையில் முக்கிய விமான நிலையமான சென்னை விமான நிலையத்தில் அடிப்படை பராமரிப்பு, கட்டமைப்பு பிரச்சனைகள் கவலைக்குரிய நிலையில் உள்ளன. இது குறித்து பயணிகளும், சென்னை வரும் உலகளவிலான முதலீட்டாளர்களும் புகார் தெரிவித்து வந்தனர்.

தனியார்மயம்

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம், மேலாண்மை மற்றும் எதிர்கால மேம்பாட்டு பணிகளை, ஏஏஐ அல்லாத வேறு தகுதியான பொதுத் துறை நிறுவனத்திடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் விஜய் குறிப்பிட்டிருந்தாராம்.

கண்டனங்கள்

ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

அருணன் விமர்சனம்

சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தை பொது- தனியார் பங்களிப்பு முறையில் மேம்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அருணன் கண்டித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+