"விஜய்யிடம் வெளிப்படத்தன்மை இல்லை.. அரசு பதில் சொல்லியே தீரணும்.." சிபிஎம் சண்முகம் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலும் கூட இடதுசாரிகள் தொடர்ந்து விஜய் அரசை விமர்சித்தே வருகிறது. இதற்கிடையே தவெக அரசு எந்தவொரு விஷயத்திலும் வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவதில்லை என சாடியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், முதல்வர் என்பவர் அனைவருக்குமானவர் என்றும் எதிர்க்கட்சியினரின் தொகுதிகளை ஒதுக்கும் செயலில் முதல்வர் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே பாமகவின் முக்கிய தலைவரும் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சவுமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி தரப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதை சவுமியா அன்புமணி மறுத்திருந்தார். இது வெறும் வதந்தி என்றும் இதை நம்ப வேண்டாம் எனவும் சவுமியா அன்புமணி கூறியிருந்தார். இருப்பினும், இது தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவியே வருகிறது.

CPM Leader Questions Vijay CPM Vijay

வெளிப்படைத்தன்மை இல்லை

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகத்திடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை எந்த ஒரு பிரச்சனையிலும் வெளிப்படை தன்மையோடு கருத்துகளை சொல்வது இல்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். அதே கொள்கையை தான் பாமக விஷயத்திலும் கடைப்பிடிக்கிறார்கள்.

எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்

நேற்று தாராபுரத்தில் முதலமைச்சர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர், தான் வெற்றி பெற்றால் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்தேன் என்று ஒரு வாக்குமூலத்தை கொடுத்திருக்கிறார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்? எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இருக்கும் தொகுதிகளுக்கு ஆளுங்கட்சி எதுவும் செய்யாது என்று முதலமைச்சரை வைத்துக்கொண்டே அவர் சொல்லியிருக்கிறார். இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர் நம்முடைய முதலமைச்சர்தான்.

முதலமைச்சர் என்பவர் அனைவருக்குமான முதலமைச்சர். 34 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று, 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் ஒட்டுமொத்த மக்களுக்கும், அனைத்து தொகுதிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் நடக்க வேண்டும். பாரபட்சமாக நடந்துகொள்வது என்பது சட்டத்திற்கும், மக்களின் எதிர்பார்ப்பிற்கும் விரோதமானது.

ஆளும் தரப்புக்கு மட்டும்!

ஆனால், ஒரு வேட்பாளர் முதலமைச்சருக்கு அருகிலேயே வைத்துக்கொண்டு, 'ஆளுங்கட்சியில் சேர்ந்தால்தான் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும்' என்று சொல்வதை முதலமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா? இந்த வாக்குமூலத்தை அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்பதற்கான விளக்கத்தை முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அப்படி ஒரு அணுகுமுறை இருந்தால் அது மிகவும் தவறானது. ஒட்டுமொத்த எட்டு கோடி மக்களுக்கும் அவர்தான் முதலமைச்சர். அதற்குரிய முறையில் அவருடைய அணுகுமுறை இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல்

மதுராந்தகம் தொகுதியில் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2026 மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு [தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தவெக சார்பில் மரகதம் குமரவேலும், திமுக சார்பில் இ. பரந்தாமனும், அதிமுக சார்பில் கனிதா சம்பத்தும் போட்டியிடுகிறார்கள். இது தவிர சிபிஎம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களம் இறங்குவதால், இத்தொகுதியில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+