5வது கூட்டணியில் விரிசலா? சசிகலா லிஸ்ட்டை போட்டதுமே.. ராமதாஸ் அதிரடி! எடப்பாடியின் பிளான் பலிக்குமோ
சென்னை: அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய விகே சசிகலா, தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காணப்போவதாக அறிவித்த இந்த 5வது அணியில் இப்போது சில சிக்கல்கள் எழுந்துள்ளதாம். அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல்தான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.
20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. அதே அளவிற்கு வலுவான கூட்டணி அமைத்து அதிமுகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி முழு வீச்சில் களமிறங்கி வேலை பார்த்து வருகிறது.

சின்னம்மா கூட்டணி விரிசல்
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே சசிகலா புதிதாக கட்சி ஒன்றை தொடங்கினார். அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய சசிகலா தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து ராமதாசும் சசிகலாவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர். தனது மகன் அன்புமணியால் நொந்து போயிருந்த ராமதாஸுக்கு சசிகலாவின் கூட்டணி புதிய தெம்பை கொடுத்தது என்றே சொல்லலாம். காரணம் வன்னியர் ஆதிக்கம் உள்ள தொகுதிகளில் அன்புமணிக்கு எதிராக களமிறங்க சசிகலாவின் கூட்டணி தனக்கு துணை நிற்கும் என நம்பினார் ராமதாஸ்.
டாக்டர் ராமதாஸ்
இதையடுத்து, இந்த தேர்தலில் தங்களது கூட்டணி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் என இருவரும் கூட்டாக அதிரடியாக அறிவித்தனர்.,. ராமதாஸ் சசிகலா கூட்டணியால் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கொஞ்சம் ஜெர்க்கானாலும் அதை ஈடுகட்ட தேவையான புது யூகங்களோடு களத்தில் இறங்கியுள்ளனர்.
ஐந்தாவது அணியாக களத்தில் இறங்கியுள்ள ராமதாஸ்-சசிகலா கூட்டணி அதிமுக கூடாரத்தில் சலசலப்பு ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது ராமதாஸ்-சசிகலா கூட்டணி இலையே விரிசல் ஏற்பட்டுள்ளதோ என எண்ண தோன்றுகிறது. காரணம் ஒரே தொகுதிக்கு இருவரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது அந்த கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 29ஆம் தேதி அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சசிகலா வெளியிட்டார். அதில் மயிலாடுதுறை தொகுதிக்கு சுதாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை வேட்பாளர்
இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் நேற்று 5 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அந்த பட்டியலில் மயிலாடுதுறை தொகுதியில் பாக்கம் சக்திவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மயிலாடுதுறை தொகுதிக்கு சசிகலா வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் இப்போது அதே தொகுதிக்கு ராமதாஸ் வேட்பாளர் அறிவித்துள்ளது இருவரின் ஆதரவாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோருக்கு குடைச்சல் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ராமதாஸ்-சசிகலா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகிறதாம்..
எடப்பாடி பழனிசாமி பிளான்
இப்படி தொடக்கத்திலேயே ஒருமித்த புரிதலின்றி தடுமாறுவதையே இந்த மயிலாடுதுறை வேட்பாளர் குழப்பம் உணர்த்துகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் அவசர அவசரமாகக் கைகோர்த்த இந்தத் கூட்டணி, முறையான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை முடிக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவிப்பது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது.
ஒரே தொகுதிக்கு 2 வேறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, அடிமட்டத் தொண்டர்களிடையே நம்பிக்கையின்மையை உருவாக்குவதுடன், வலுவான கூட்டணியாகத் தங்களை முன்னிறுத்தும் இவர்களது முயற்சிக்குத் தேர்தலுக்கு முன்பே முட்டுக்கட்டையாக அமைந்துவிடும் போல தெரிகிறது.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
- நமது சிறப்பு நிருபர்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications