உண்மை வேணுமா.. ஹெட்லைன் வேணுமா? ஆன்லைன் ரம்மி குறித்த கேள்வியால் டென்ஷன் ஆன கிரிக்கெட் வீரர் அஸ்வின்
சென்னை : நகர்ப்புறங்களில் விளையாட இடம் கிடைப்பது கடினமாக உள்ளது, மாணவர்களுக்கு விளையாட இடம் வேண்டி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் முறையிடுவேன் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கோடைகால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "வெளிநாடுகளில் ஒரு குழந்தை கிரிக்கெட் விளையாட நினைத்தால் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் இந்தியாவில் கிடைக்கிறதா என்றால் அது இல்லை.

நகர்ப்புறத்திலிருந்து கிரிக்கெட் விளையாட வருபவர்கள் குறைந்து, கிராமப்புறத்திலிருந்து தற்போது அதிக அளவில் விளையாட வருகிறார்கள். விளையாடுவதற்கு தற்போது இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. தற்போது அகாடமிகள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமப்புறத்தில் இருந்து குழந்தைகளை வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாங்கள் முன்னெடுப்பது மட்டுமின்றி அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இளைஞர்களும் மாணவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்குச் சென்னையில் போதிய மைதான வசதி இல்லை. இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரிடம் முறையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் முறையிடுவேன்" எனத் தெரிவித்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அஸ்வின், "உங்களுக்கு உண்மை வேணுமா.. இல்ல ஹெட்லைன் வேணுமா? ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டு இருந்தால் அதை விளையாடாதீர்கள். நான் அதை விளையாடவில்லை. கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை. அது "கேம் ஆஃப் ஸ்கில்ஸ்". அதனால் அதைச் சூதாட்டம் என்றால் இல்லை என்று தான் கூறுவேன்" எனத் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications