Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டேய்.. பின்னாலயே வர்றேன்டா".. இரவெல்லாம் அழுது தீர்த்த பரிதாப வினோதினி.. அதுக்குன்னு?.. அதிர்ந்த ஆவடி

காதலன் இறந்த துயர் தாங்காமல் ஆவடியை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆவடியில் ஒரே நாளில், 2 வேறு வேறு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.. உறவின் பிரிவின், துயரத்தில் இருந்து மீள முடியாத நிலையில், 2 உயிர்களும் பறிபோயுள்ளன.. என்ன நடந்தது?

ஆவடி பக்தவச்சலபுரம் ஜோதிராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் தணிகைவேல்.. 45 வயதாகிறது.. இவரது அப்பா பெயர் முத்துவீரன் 77 வயதாகிறது.. அம்மா பெயர் சரோஜினி, 64 வயதாகிறது.

இவர்கள் 3 பேருமே ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.. சரோஜினிக்கு கடந்த சில நாட்களாகவே உடம்பு சரியில்லை.. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்..

மொட்டை மாடி

மொட்டை மாடி

நேற்றுமுன்தினம் இரவுதான் வீடு திரும்பியிருந்தார்.. ஆனால் அன்றைய தினம் இரவே அவரது உயிர் பிரிந்துவிட்டது.. சிறிது நேரத்தில், தன்னுடைய மனைவியின் அருகில் சென்று பார்த்துள்ளார் கணவர்.. அப்போது, அவர் இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.. கதறி கதறி அழுதார்.. அதற்கு மேல் அவரால் அங்கு நிற்க முடியாமல், மனைவியின் ஒரு சேலையை எடுத்துக் கொண்டு, தன்னுடைய வீட்டின் மாடிக்கு ஏறி சென்றார்.. அங்குள்ள கூரையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாயில், மனைவியின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்..

படுக்கையில் அம்மா

படுக்கையில் அம்மா

இத்தனைக்கும் அதே வீட்டில்தான், மகன் இருந்துள்ளார்.. அம்மா இறந்ததை மகனுக்கும் சொல்ல முடியாமல் விக்கி விக்கி அழுத நிலையில், தற்கொலை செய்து கொள்ள, புடவையை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றுவிட்டார்.. நேற்று காலை மகன் தணிகைவேல், பெற்றோர் தங்கி இருந்த ரூமுக்குள் சென்று பார்த்தார். அப்போதுதான் அம்மா படுக்கையில் இறந்து கிடப்பதை பார்த்தார்.. அப்பாவை தேடி பார்த்தபோது, அவர் பிணமாக தொங்குவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்... இதுபற்றி ஆவடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து, 2 பேரின் சடலத்தையும் மீட்டு கொண்டுபோனார்கள்..

இரும்பு கம்பி

இரும்பு கம்பி

இதே ஆவடியில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. கோவில்பாதகை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.. 62 வயதாகிறது.. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.. இவரது மகள் வினோதினி.. 22 வயதாகிறது.. இவர் வீட்டிலிருந்தே அழகப்பா யூனிவர்சிட்டியில் எம்பிஏ படித்து வந்துள்ளார்.. படிக்கும்போது இவருடன் படித்த கரிமேடு பகுதியை சேர்ந்த வசந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார்... இந்த நிலையில், கடந்த 10ம் தேதி வசந்த் கும்மிடிப்பூண்டி அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது..

பெட்ரூமில்

பெட்ரூமில்

காதலன் மரண செய்தி கேட்டதுமே, அதிர்ந்து போய் உட்கார்ந்துவிட்டார் வினோதினி.. வீட்டில் யாரிடமும் பேசவில்லை.. பித்து பிடித்ததுபோல் இருந்துள்ளார்.. காதலனையும் மறக்க முடியாமல் மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார்.. நேற்று முன்தினம் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில், தற்கொலை செய்து கொண்டார்.. ரொம்ப நேரம் ஆகியும் ரூமை விட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் வினோதினி வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

வினோதினி

வினோதினி

அப்போதுதான் வினோதினி பெட்ரூமிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது... உடனே ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தரப்படவும், அவர்கள் விரைந்து வந்து, வினோதினியின் சடலத்தை உடலை கீழே இறக்கி, போஸ்ட் மார்ட்டம் செய்ய கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இல்லாத உலகில் வாழவே கூடாது என்றும், காதலன் இல்லாத உலகில் வாழவே முடியாது என்றும், 2 வேறு வேறு தற்கொலைகள் ஆவடி மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+