லாட்ஜில்.. பெண்ணின் சடலத்துடன்.. ஒரே படுக்கையில் 2 நாள் தூங்கிய நபர்.. நம்ம திருவல்லிக்கேணியில்தான்
லாட்ஜில் பெண்ணை கொன்றுவிட்டு, சடலத்துடன் 2 நாள் தூங்கியிருக்கிறார் ஒரு இளைஞர்
சென்னை: லாட்ஜில் பெண்ணின் சடலத்துடன் ஒரே ரூமில் 2 நாள் தூங்கியிருக்கிறார் ஒரு இளைஞர்.. நம்ம சென்னையில்தான்..!
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது... அதாவது, விசிக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமானதாம்.. இந்த லாட்ஜுக்கு கடந்த 3-ந்தேதி நைட் ஒரு இளம்ஜோடி வந்துள்ளனர்.
இவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்று தெரிகிறது.. இந்த லாட்ஜிலேயே ரூம் எடுத்து தங்கினார்கள்.. ஆனால், கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கி இருந்த ரூம் கதவு திறக்கப்படவில்லை.

லாட்ஜ்
இதனால் லாட்ஜ் ஊழியர்கள் சந்தேகம் அடைந்து, நேற்றுமுன்தினம் காலையில் அந்த ரூமுக்கு சென்று பார்க்க முனைந்தனர்.. ஆனால், ரூம் பக்கத்தில் செல்வதற்கு முன்பேயே, குப்பென்று துர்நாற்றம் வீசியது... இதனால் அதிர்ந்து போன ஊழியர்கள் உடனடியாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ரூம் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.. இதனால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.

லாட்ஜில் ரூம்
அங்கே பார்த்தால், அந்த இளம் ஜோடி பிணமாக விழுந்து கிடந்தனர்.. இதையடுத்து, அவர்கள் குறித்த விசாரணை ஆரம்பமானது.. மேற்கு வங்காள மாநிலம் பங்குரா பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.. இவர்கள் காதல் ஜோடி.. இளைஞர் பெயர் பிரசெஞ்சித் கோஷ், அந்த பெண்ணின் பெயர் அர்பிதா பால்... 20 வயதாகிறது.. இன்னும் திருமணமாகவில்லை.... ஆனால், தம்பதி என்று பொய் சொல்லித்தான் ரூம் எடுத்துள்ளனர்.. இந்த பெண் என்றைக்கு இறந்தார் என்று உறுதியாக தெரியவில்லை.. அவரது சடலம் அழுகிகிடந்தது.. பெண்ணின் முகம் முழுக்க தழும்புகள் கிடந்தன.

தலைகாணி
அதாவது, தலைகாணியை எடுத்து, முகத்தில் வைத்து அமுக்கியதற்கான தடயம் காணப்பட்டது.. எனவே அந்த பெண்ணை, இளைஞர்தான் தலைகாணியால் அமுக்கி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. அந்த பெண் இறந்து 2 நாட்கள் ஆகியும், இளைஞர் ரூமை விட்டு வெளியே வரவில்லை.. அதுமட்டுமல்ல, அந்த சடலத்துடனேயே, அதே படுக்கையில் பக்கத்தில் படுத்து தூங்கி உள்ளார்.. காதலியின் பிணத்துடன் 2 நாட்கள் இப்படியே தனியாக இருந்துள்ளார்... அதன்பிறகு மனம்வெறுத்துப்போய், தூக்கில் தொங்கி உள்ளார்.. இதற்காக விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. காதலியை கொலை செய்த விரக்தியில், இந்த தற்கொலையை அவர் செய்திருக்கலாம் என்கிறார்கள்.

லாட்ஜில் சடலம்
அந்த பெண் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும்.. அதனால்தான் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இந்த இளைஞர் இறந்து 2 நாட்கள் இருக்கலாம், காரணம், அவரது உடல் அழுகிய நிலையில் இல்லையாம்.. இப்போதைக்கு 2 பேரின் சடலங்களையும் போலீசார் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. ஆனால், இவர்கள் ஏன் மேற்கு வங்கத்தில் இருந்து இங்கு வந்தார்கள்? இவர்களுக்குள் என்ன தகராறு? ஏன் கொலை நடந்தது? ஏன் தற்கொலை நடந்தது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களின் மேற்கு வங்காள அட்ரஸை வைத்து அங்கும் போலீசார் விசாரிக்க சென்றுள்ளனர்..

அட்ரஸ்
லாட்ஜ்ஜில் இவர்கள் ரூம் எடுத்தபிறகு, முதலில் 2 நாட்கள் பிரசென்ஜித் கோஷ் மட்டும் அடிக்கடி வெளியே வந்து சென்றுள்ளார்... அதன்பிறகு 2 பேருமே தங்களது ரூமை விட்டு வெளியே வரவில்லை என்று சொல்லப்படுகிறது.. அர்பிதா பாலின் அழுகிய சடலத்தை போலீசார் பார்த்தபோது, அவரது முகத்தில் அந்த தலைகாணி அப்படியே அமுங்கிய நிலையில் இருந்ததாம்.. இப்போதைக்கு சந்தேக மரணம் என்று மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டு வந்தால்தான் கொலையா அல்லது தற்கொலையா என தெரியவரும்..!
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications