"நானா கழட்டலை.. போலீஸ்காரங்கதான்".. அடிச்சும் உதைச்சாங்க.. தீக்காயத்துடன் வீடியோ போட்ட உஷா!
மது விற்ற பெண் தற்கொலை முயற்சி மேற்கொண்டதுடன் வீடியோ பதிவிட்டுள்ளார்
சென்னை: போலீசாரை பார்த்ததும், தன்னுடைய டிரஸ்ஸை கழட்டிவிட்டு நிர்வாணமாக ஓட்டம் பிடிப்பாராம் உஷா என்பவர்.. இந்நிலையில், "எஸ்ஐதான் என் டிரஸ்ஸை கழட்டிவிட்டுடாங்க.. என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்" என்று தற்கொலைக்கு முயன்ற உஷா, பேசுவதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் உஷா என்ற பெண்.. இவருடைய கணவன் ரத்தினம். இருவருமே மதுவிற்பனையை கள்ளத்தனமாக அந்த பகுதியில் செய்து வருபவர்கள்.. இவர்கள் மீது போலீசிலும் கேஸ் நிறைய உள்ளன.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு தம்பதி இருவரும் வழக்கம்போல், மதுவிற்பனை செய்து கொண்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்றபோது, போலீசாரை கண்டதும் உஷா தம்பதியினர் வீட்டுக்குள் ஓடிச் சென்று விட்டனர்..
போலீசார் அவர்களை கைது செய்ய வீட்டினுள் நுழைந்தபோது, உஷா திடீரென தன்னுடைய டிரஸ்ஸை கழட்டிவிட்டு, மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.. அப்போது தவறுதலாக உஷா மீது தீப்பிடித்துள்ளது.. இதனால் போலீசார் உஷாவை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.. தப்பியோடிய ரத்தினத்தையும் தேடி வருகின்றனர்.
இதனிடையே வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ பரவி வருகிறது.. அதில் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் உஷா பேசுவதுபோல் உள்ளது.. "எஸ்ஐயும், போலீஸ்காரங்களும்தான் என்னை அசிங்கமாகவும், ஆபாசமாகவும் திட்டி என்னுடைய டிரஸ்களை கழட்டிவிட்டனர்.. நான் பாட்டில் விற்றது என்னவோ உண்மைதான். அதுக்காக, என்னையும், என்னுடைய 3 பிள்ளைகளையும் அடித்து உதைத்து தற்கொலை செய்து கொள்ளும்படி துாண்டினார்கள்" என்று அந்த வீடியோவில் உஷா பேசுகிறார்.
ஆனால், இந்த வீடியோவின் உண்மை தன்மை தெரியவில்லை.. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்... என்றாலும், உஷா வழக்கமாகவே இப்படித்தானாம்.. எப்போது போலீசார் தன்னை கைது செய்ய வந்தாலும், திடீரென டிரஸ்ஸை களைந்துவிட்டு, நிர்வாணமாக ஓடிவிடுவாராம்.. இதை அந்த பகுதியில் வசிப்பவர்களே சொல்கிறார்கள்.. எனினும் உஷாவின் வீடியோவின் உண்மை தன்மை குறித்த நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications
