சப்ஸ்கிரிப்ஷனில் கோடிகள்.. இறுதியில் அஷ்வனியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்.. இப்ப சந்தோஷமா
சென்னை: இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியா உலகில் பிரபலமாக இருந்த, இன்ஃப்ளூயன்சர் அஷ்வனியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் வசதியின் மூலம் மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமான வருமானம் சம்பாதித்து சாதனை படைத்தாக கூறப்படும் அஸ்வனியின் பக்கம் முடக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலம் அஸ்வனி அஷ் purplehalcyon என்ற பெயரில் இன்ஸ்டாவில் இயங்கி வந்தார். இவர் தான் தற்போது இணையதளங்களில் இதுதான் மிகப்பெரிய "டாக் ஆஃப் தி டவுன்". ஒரு புகைப்படம் அல்லது வீடியாவிற்கு பணம் கொட்டுகிறது என்றும் கோடிகளில் சம்பாதிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வந்தார்கள் பேசாமல் நாமும் பெண்ணாக பிறந்திருக்கலாம் என்றும் சிலர் எக்ஸ் தளத்தில் தொடர்ந்த விமர்சித்து வந்தார்கள். இதை பார்த்த பலரும் இப்படி கூட சம்பாதிக்க முடியுமா என்று ஆச்சரியப்பட்டனர்.

ஆனால் ஒரு கோடி சம்பாதிக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமான கணக்கு கிடையாது.. நெட்டிசன்கள் தான் இப்படி கூறி வந்தார்கள். அவர்களின் கணக்கு உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. ஏனெனில் இன்ஸ்டாகிராமில் அஸ்வனிக்கு சுமார் 1.2 மில்லியன் (12 லட்சம்) ஃபாலோயர்கள் உள்ளனர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Exclusive Subscription' முறையை வைத்திருக்கிறார்.
இதன் மூலம் இவரது பிரத்யேக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்க்க ஒருவர் மாதம் சுமார் ₹399 கட்டணம் செலுத்த வேண்டும்.
இவரது மொத்த ஃபாலோயர்களில் வெறும் 2% முதல் 3% பேர் (சுமார் 25,000 முதல் 30,000 பேர்) சந்தாதாரர்களாக சேர்ந்தாலே, மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வந்துவிடும்.அப்படித்தான் சேர்ந்துள்ளார்கள்.
இவர் சம்பாதிக்கு முறையை தான் பலரும் கேள்வி எழுப்பி விவாதம் செய்கிறார்கள் இவர் பதிவிடும் கன்டென்ட் சாதாரணமான புகைப்படங்கள் முதல் சற்றே கிளாமரான புகைப்படங்கள் வரை இருக்கிறது. அஸ்வினி அஷ் அண்மையில் நைட்டி அணிந்து கார் கழுவும் வீடியோ ஒன்று செம வைரலானது.இந்த வீடியோவை காட்டித்தான் கோடிகளில் சம்பாதிப்பதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள்
கடினமாக உழைக்கும் பலருக்குக் கிடைக்காத வருமானம், வெறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவருக்குக் கிடைப்பது விவாதத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவரது வீடியோக்களில் உள்ள கண்டென்ட் குறித்து ஆரம்பம் முதலே சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இதையடுத்து அஸ்வனியின் இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டுள்ளது. Community Guidelines மீறல் காரணமாகவா, அல்லது வேறு தொழில்நுட்ப காரணங்களாலா இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து Instagram இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. விமர்சனங்களை பொருட்படுத்தாமல் முன்னேறிய அஷ்வனிக்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அஸ்வனி அஷ் மட்டுமல்ல தெலுங்கு பிக் பாஸ் பிரபலம் விஷ்ணுப்ரியா மற்றும் நடிகை கிரண் போன்றோரும் இது போன்ற சப்ஸ்க்ரிப்ஷன் முறையைப் பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். "பணம் சம்பாதிக்க இது ஒரு புதிய வழி" என்று ஒரு தரப்பினரும், "இது இளைய தலைமுறையைத் தவறாக வழிநடத்துகிறது" என்று மற்றொரு தரப்பினரும் விவாதிக்கிறார்கள்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications