ஆஹா..அடுத்த வாரம் புரட்டாசியா! ஒரு மாசத்துக்கு மொத்தமாய் சாப்ட்ருவோம்! காசிமேட்டில் எவ்வளவு கூட்டம்!
சென்னை: புரட்டாசிக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில், மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிந்ததால், மீன்விற்பனை களைகட்டியது. மீன்களின் விலை கடந்த வாரத்தைவிட அதிகமாக இருந்தபோதிலும், மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.
சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்கு கூடுவது வழக்கம்.
கடற்கரையிலிருந்து கடலுக்குள் விசைப்படகுகள் மூலமாக மீன்களை பிடித்து நேரடியாக காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படுவதால், அனைத்து வகையான மீன்களும் கிடைக்கும். இதனால், விடுமுறை தினங்களில் மீன்கள் விற்பனை களைகட்டும்.

காசிமேடு மீன் விற்பனை கூடம்
காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் அனைத்து வகையான மீன்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால், சென்னையில் உள்ள மொத்த வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும், மீன் அசைவ பிரியர்களும் மீன்களை வாங்குவதற்காக அதிகாலை முதலே அலை அலையாக வந்து, தங்களுக்குத் தேவையான மீன்களை வாங்கிச் செல்வார்கள். இதனால், விடுமுறை தினங்களில் காசிமேடு மீன்மார்க்கெட் திருவிழாகோலம் போல காட்சியளிக்கும்.

அடுத்த வாரம் புரட்டாசி
இந்நிலையில், இந்து கடவுளான விண்ணு பகவானுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில், பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்ப்பது வழக்கம். அசைவ பிரியர்களும் கூட இந்த மாதத்தில் மீன் உள்ளிட்ட அசைவ உணவை உண்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பார்கள். இத்தகைய சிறப்புமிக்க புரட்டாசி மாதம் அடுத்த வாரம் தொடங்குகிறது.

புரட்டாசிக்கு முந்தைய ஞாயிறு
அடுத்தவாரம் புரட்டாசி மாதம் பிறக்க உள்ள நிலையில், கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. நள்ளிரவு 2 மணி முதல் ஏல முறையில் மீன் விற்பனை தொடங்கியது. மீன்களை வாங்க சிறிய வியாபாரிகளும், பெரிய வியாபாரிகளுடன், அசைவ பிரியர்களும் குழுமியிருப்பதால் மீன்பிடி சந்தையே, அசைவ பிரியர்களால் சூழப்பட்டுள்ளது.

மீன்கள் விலை உயர்வு
காசிமேடு மீன் மார்க்கெட்டில் கடந்த வாரத்தை விட மீன்களின் விலை அதிகமாகவே விற்கப்படுகிறது. கடந்த வாரம் ரூ.1100-க்கு விற்பனையான வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1500-க்கும், வவ்வா மீன் ரூ.800-க்கும், பெரிய சங்கரா மீன் ரூ.700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இறால் மீன் ரூ.600-க்கும், நண்டு ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களின் விலை, சராசரியாக ரூ.300 முதல் ரூ.500 வரை விலையேற்றத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

மக்கள் கூட்டம்
கடந்த வாரத்தை விட அதிக விலைக்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், புரட்டாசிக்கு முந்தைய கடைசி ஞாயிறு என்பதால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அசைய பிரியர்கள், தங்களுக்குத் தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுவதால், காசிமேடு மீன் விற்பனை கூடமே, திருவிழாக் கூட்டம் போலக் காட்சியளிக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications