கச்சா எண்ணை விலை குறைவு எதிரொலி.. பெட்ரோல், டீசல் விலை குறைந்தது
சென்னை: சென்னையில் இன்று, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.11 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.98 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 18 காசுகள் குறைந்து, டீசல் விலை 16 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்தவகையில், கச்சா எண்ணெய் விலை 4.8 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் இல்லாத சரிவு ஆகும். தற்போது பேரல் 45.88 டாலராக குறைந்துள்ளது. இந்தாண்டில் மட்டும் 24 சதவீதம் அளவிற்கு கச்சா எண்ணெயின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஓரளவுக்கு குறைந்து வந்தன. தற்போது, கச்சா விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.11 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.98 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 18 காசுகள் குறைந்து, டீசல் விலை 16 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications