தோனிக்கு ஆடம்பரமே பிடிக்காது! சிம்பிளிசிட்டி தான்.. சொத்து மதிப்பு எவ்ளோ பாருங்க.. அப்போ கோலிக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் புகழ் வெளிச்சம் சற்றும் மங்காமல் ரசிகர்கள் மத்தியில் இன்னும் கொண்டாடப்படும் வீரராக தோனி உள்ளார். உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான தோனியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட் உலகில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. புகழின் உச்சத்தில் இருந்த போது தோனி திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றாலும் தற்போதும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள புகழ் கொஞ்சமும் குறையவில்லை.

CSK Captain Dhonis Net Worth Is Rs.1040 Crore, Kohlis Net Worth Is Bit More Than That

ஐபிஎல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடி வருவதால் அவர் மைதானத்திற்கு எண்ட்ரி கொடுக்கும் போதே ரசிகர்கள் எந்த அளவுக்கு அவரை இன்னமும் கொண்டாடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தாலும் எந்த மைதானத்திற்கு சென்றாலும் தோனி பேட்டிங் செய்ய கிரவுண்டில் கால் வைத்து விட்டால் ரசிகர்கள் சத்தம் விண்ணை பிளக்கும்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய போது எந்த அளவுக்கு ஃபேன் பேஸ் வைத்து இருந்தாரே அதே அளவு தற்போதும் தோனிக்கு உள்ளது. உலகில் அதிகம் சம்பாதிக்கக் கூடிய விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருக்கும் தோனி மிகவும் எளிய பின்னணியில் இருந்து வந்தவர். சாதரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து புகழின் உச்சியை எட்டியவர். என்னதான் உலக புகழ் பெற்ற விளையாட்டு வீரராக இருந்தாலும் தோனி இப்போதும் மிக எளிமையான வாழ்க்கைமுறையைதான் கடைபிடித்து வருகிறார்..

அண்மையில் கூட தனது பிறந்த நாளை தனது வீட்டிலேயே கொண்டாடினார். அதேபோல், தனது வீட்டில் வேலை பார்ப்பவரை பைக்கில் கொண்டு இறக்கிவிட்ட வீடியோக்களும் இணையத்தில் டிரெண்ட் ஆகின. பெரிதும் ஆடம்பரத்தை விரும்பால் எளிமையாக இருக்கும் தோனியின் சொத்து மதிப்பு ரூ.1040 கோடியாம். Stock Gro- இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் தோனி, அதற்கு 12 கோடி வருமானம் பெறுகிறார். அது தவிர ரியல் எஸ்டேட் துறையிலும் பணம் ஈட்டி வருகிறார். விளம்பரம் உள்ளிட்டவைகளில் அவருக்கு வருமானம் வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியின் சொத்து மதிப்பு தோனியை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது. அதாவது கோலியின் சொத்து மதிப்பு ரூ.1050 கோடியாக உள்ளது. பிசிசிஐயின் ஏ + ஒப்பந்தத்தில் இருக்கும் கோலி ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும் ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும் 20 ஓவர் போட்டிக்கு ரூ.3 லட்சமும் ஊதியமாக பெறுகிறார்.

அதுபோக ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாட ரூ. 15 கோடி சம்பளம் பெறுகிறார். பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக ஆண்டுக்கு ரூ.7 கோடியும், விளம்பரங்கள் மூலமாகவும் பல கோடியும் வருமானம் ஈட்டுகிறார். விராட் கோலிக்குக் இன்ஸ்டாகிரமில் மட்டும் 252 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+