விஸ்வரூபம் எடுத்த சிஎஸ்கே.. புல்லரித்து பூரித்துப்போன ரசிகர்கள்.. கூஸ்பம்ப் மீம்ஸ்
சென்னை: 3 அடி வாங்கிய பிறகு வில்லனை திரும்ப அடிக்கும் எம்ஜிஆரை பார்த்தது போன்ற பூரிப்பிலிருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நம்ப முடியாததெல்லாம் நடந்தது. இதுவா சிஎஸ்கே என்று கேட்கும் அளவுக்கு மோசமாக விளையாடி வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்குது.. உன்கிட்ட பினிஷிங் சரி இல்லையேப்பா.. என்று சொல்லும் அளவுக்கு, மும்பைக்கு எதிரான ஆரம்ப போட்டியில் வென்ற தோடு சரி, அதற்கு பிறகு வெற்றிக்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்பது போல விளையாடிக்கொண்டு இருந்தனர் அணி வீரர்கள்.

காயம்பட்ட சிங்கத்தின் மூச்சுக் காற்று
மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரு அணியா இப்படி விளையாடுகிறது? அதுவும் கேப்டன் தோனி இருக்கும் அணியா இப்படி ஆடுகிறது? என்றெல்லாம் ரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டார்கள். இந்த நிலையில்தான் நேற்று அந்த சர்ப்ரைஸ் நடந்தது. "காயம்பட்ட சிங்கத்தின் மூச்சுக்காற்று அதன் கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.." என்பதைப் போல மொத்த ஆவேசத்தையும் சேர்த்து பஞ்சாப் அணியை பதறவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

அடி இடி போல
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 179 என்ற பெரிய இலக்கை விரட்டி வென்றது சிஎஸ்கே. அவுட் ஆப் பார்ம், ஆகி இருந்த வாட்சனே, 83 ரன்கள் விளாசினார் என்றால் பாருங்கள். டுப்ளசிஸ் 87 ரன்கள் விளாசினார். அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருந்தது. இதைப் பார்த்ததும் டாப் கியருக்கு போய்விட்டனர் சிஎஸ்கே ரசிகர்கள்.

பாட்ஷா காட்சி
அதிலும், பாட்ஷா திரைப்படத்தில், கட்டிவைத்து கதாநாயகன் ரஜினிகாந்தை அடித்து நொறுக்குவார்கள் வில்லன்கள். அப்போது சிரித்தபடியே இருப்பார் ரஜினி. பிறகு தங்கைக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது, தண்ணீர் பைப்பை பிடிங்கி வில்லன்களை அடித்து நொறுக்குவார்.

செம மீம்
அதுபோல தோனியும் பல்வேறு விமர்சனங்களை தாங்கினார். ஆனால் இன்று அவரது அணி பாட்ஷா ஃபைட் சீன் போல வெறி கொண்டு நிற்கிறது என்பதை காட்டும் வகையிலான மீம் வைரலாகி வருகிறது. அதிலும், ரஜினிகாந்த் கையில் ஜனகராஜ் முத்தம் கொடுக்கும் காட்சி இருக்கே.. அடடா, நீங்களே இந்த முறை பாருங்கள் புல்லரிக்கும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications