CSK Memes:கொஞ்சம் கூட உத்வேகம் இல்லை.. ராஜஸ்தானிடம் மொத்தமாக சரணடைந்த சிஎஸ்கே.. தெறிக்கும் மீம்ஸ்
சென்னை: அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்சை நேற்றைய லீக் ஆட்டத்தில் சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் போட்டியை பார்த்த ரசிகர்களுக்குத்தான் பரபரப்பும், வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகமும் இருந்தது. சென்னை சூப்பர் கிங்சுக்காக ஆடிய பெரும்பாலான வீரர்களுக்கு அது துளியும் இல்லை.
வந்தே பாரத் பிளைட் கிடைச்சா கூட ஊர் பக்கம் போய்விடலாமே என்று வாட்ச்சை திரும்ப திரும்ப பார்க்கும் மனநிலையில்தான் அவர்கள் இருந்தார்கள்.
அதன் விளைவாகத்தான், 20 ஓவர்கள் முடிவில், வெறும்.. ஆமாம்.. வெறும், 125 ரன்களை எடுத்தது சிஎஸ்கே. இருந்தாலும், 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளோம். இன்னும் 5 விக்கெட் பத்திரமாக இருக்கிறது என்ற பெருமிதம் அவர்கள் கண்களில் பார்க்க முடிந்தது.

எளிதான வெற்றி
இந்த ஸ்கோரை 17.3 ஓவர்களிலேயே, வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து கடந்து சென்று வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். "இன்றுடன் இப்படம் கடைசி.." என்று டூரிங் டாக்கீஸ்களுக்காக போஸ்டர் ஒட்டுவதை போல சிஎஸ்கே பிளேஆப் கனவும் அத்தோடு கலைந்து போனது. போராடி தோற்றால் கூட பரவாயில்லை. தோற்பதற்காகவே போராடிக் கொண்டு இருந்தனர் சிஎஸ்கே வீரர்கள். விடுவார்களா ரசிகர்கள். பொங்கி தீர்க்கிறார்கள் மீம்ஸ் போட்டு. இதோ சில ஸ்பெஷல் ஐட்டங்களை பாருங்க.

தூங்கிவிட்டார்கள்
சிஎஸ்கே பேட்டிங் செய்தபோது, பவுண்டரி லைனில் ராஜஸ்தாந் வீரர்கள், துண்டை விரித்து படுத்து தூங்கியே விட்டார்கள். ஏன்னா, எந்த பந்தும்தான் அந்த பக்கமே போகலியே. டெஸ்ட் மேட்சில் பவுண்டரிகள் செல்வது அரிதுதானே பாஸ்.

ரசிகர்கள் நிலைமை
நேற்று தோற்ற பிறகும், சிஎஸ்கே வீரர்கள் ஜாலியாகத்தான் இருந்தார்கள். ரசிகர்கள்தான் இந்த போட்டோவில் இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களை போல ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி மனசை தேற்றிக் கொண்டு இருந்தார்கள்.

பழம் பெருமை
நாங்கல்லாம் அந்த காலத்துல விளையாடுறப்போ என்று சிஎஸ்கே ரசிகர்கள் இனி பழம் பெருமைதான் பேச முடியும். இப்போ காலம் மாறிவிட்டது. சிஎஸ்கே பாயிண்ட் டேபிளின் கீழே போய்விட்டது என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.

பந்துகளை சாப்பிட்ட தோனி
28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஏறத்தாழ ஒரு டெஸ்ட் போட்டியை போல ஆடிக் கொண்டிருந்த தோனி பந்துகளை இப்படித்தான் போட்டு சாப்பிட்டார் என கிண்டல் செய்கிறது இந்த மீம்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications