Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாதவை கண் முன்னாடி காட்டிட்டாங்க பரமா! 2020 சீசனை படம் போட்டு காட்டிய சிஎஸ்கே.. இவ்வளவு பிரச்சனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொல்கத்தாவிற்கு எதிராக இன்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் 2020 சீசனில் சிஎஸ்கே அணி ஆடியதை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது.

2022 ஐபிஎல் சீசன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த முறை 10 அணிகள் இந்த சீசனில் ஆடி வருகின்றது. முதல் போட்டியில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது.

சிஎஸ்கே அணியில் இந்த முறை ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பெற்றுள்ள நிலையில் ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார்.

 டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

இன்று சிஎஸ்கே அணி டாஸ் தோல்வி அடைந்த நிலையில் கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். இந்த முறை சிஎஸ்கே அணியில் டு பிளசிஸ் இல்லாத நிலையில் தேவன் கான்வாய் ஓப்பனிங் வீரராக ருத்துராஜுடன் களமிறங்கினார். அதேபோல் அணியில் சிவம் டுபே, ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் முதல்முறையாக இடம்பெற்றனர். ஆனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் இந்த முறை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

 சிஎஸ்கே பேட்டிங்

சிஎஸ்கே பேட்டிங்

சிஎஸ்கே அணியில் முதல்முறை பேட்டிங் இறங்கிய தேவன் கான்வாய் மிக மோசமாக திணறினார். இவர் டி 20 போட்டிகளில் 139.35 என்ற ரன் ரேட்டில்தான் ஆட கூடியவர். ஆனாலும் நேரம் களத்தில் இருந்து ஆங்கர் இன்னிங்க்ஸ் ஆடும் வழக்கம் கொண்டவர். ஆனால் இன்று அவர் நினைத்தபடி சரியாக ஆடவில்லை. தொடக்கத்தில் இருந்தே சரியாக பந்தை ரீட் செய்ய முடியாமல் திணறினார். அதிலும் பாஸ்ட் பவுலர்களை ரீட் செய்ய முடியாமல் கடுமையாக கஷ்டப்பட்டார்.

கான்வாய்

கான்வாய்

8 பந்துகள் மட்டும் கான்வாய் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக சொதப்பினார். உமேஷ் யாதவ் பந்தில் தேவையின்றி டீப் கவர் திசையில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதற்கு முன்பாகவே ருத்துராஜ் டக் அவுட் ஆனார். பொதுவாக ருந்து எம்ஜிஆர் போல மூன்று அடி வாங்கிவிட்டு அதன்பின்தான் திருப்பி கொடுப்பார். முதல் 3 போட்டிகளில் மோசமாக் ஆடிவிட்டுதான் அவர் அதன்பின் அடித்து வெளுப்பார். 2020, 2021 சீசன்களில் இதேதான் நடந்தது.

 மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

ஆனால் கான்வாய்தான் சிஎஸ்கே அணிக்கு ஏற்றவராக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு போட்டியில் இவரை ஒதுக்கிவிட முடியாது என்றாலும் போக போக சரியாக ஆட வேண்டும். அதன்பின் நன்றாக ஆடிக்கொண்டு இருந்த உத்தப்பாவும் தேவையின்றி இறங்கி வந்து ஆடி ஸ்டம்பிட் ஆனார். வருண் போட்ட பந்தை கணிக்க முடியாமல் இறங்கி வந்து சுற்ற, கண்ணிமைக்கும் நேரத்தில் ஜாக்சன் அவரை ஸ்டம்பிட் செய்தார்.

 வரிசையாக விக்கெட்

வரிசையாக விக்கெட்

அதன்பின் இறங்கிய ராயுடுவும் நன்றாக ஆட தொடங்கிய சில நிமிடத்தில் தேவையின்றி ரன் அவுட் ஆனார். பின்னர் வந்த டுபேவும் இப்போ அவுட் ஆவார்.. அப்போ அவுட் ஆவார் என்று பதற்றத்திலேயே களத்தில் நிற்க, நினைத்து போலவே ரசல் ஓவரில் நரேனிடம் கேட்ச் கொடுத்து வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து தோனி, ஜடேஜா மட்டும் நிதானமாக ஆடினார்கள்.

 2020 சிஎஸ்கே

2020 சிஎஸ்கே

இன்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் 2020 சிஎஸ்கே அணி போலவே இருந்தது. அப்போது சிஎஸ்கே அணியில் முரளி விஜய் சில போட்டிகளில் ஆடி சொதப்பினார். பின்னர் வாட்சன் பெரும்பாலான போட்டிகளில் சரியாக ஆடாமல் சொதப்பினார். அதோடு மிடில் ஆர்டரும் ரெய்னா இல்லாமல் மோசமாக இருந்தது. ராயுடு மட்டுமே மிடில் ஆர்டரில் நன்றாக ஆடினார். ஜாதவ் அந்த சீசனில் எல்லா போட்டிகளிலும் சொதப்பினார்.

 வாணவேடிக்கை

வாணவேடிக்கை

2020 சீசன் முழுக்க பவர் பிளேவில் சிஎஸ்கே மோசமாக சொதப்பியது. இப்போது சிக்ஸ் அடிப்பார்களா, அப்போது அடிப்பார்களா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இப்போது ஜாதவ் இடத்தை துபே நிரப்பியது போல மோசமாக ஆடி வருகிறார். மீண்டும் மொயின் அலி அணியில் இணையும் வரை அணியில் சமநிலை ஏற்படாது என்றே தோன்றுகிறது. இன்று சிஎஸ்கே அணியின் ஆட்டம் 2020ல் சொதப்பி, ப்ளே ஆப் கூட செல்லாத அணியைத்தான் நினைவு படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+