காலில் ரத்தம் சொட்ட சொட்ட ஆடிய சிஎஸ்கே வீரர்.. வாட்சனுக்கு நடந்த அதே சம்பவம்- களத்தில் நடந்தது என்ன?
சென்னை: கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் டு பிளசிஸ் காலில் ரத்தம் சொட்ட சொட்ட ஆடியது வைரலாகி உள்ளது.
கொல்கத்தா சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை.
கில் 9, வெங்கடேஷ் ஐயர் 18, மோர்கன் 8, ரசல் 20 என்று சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். சிஎஸ்கே பவுலர்கள் எல்லோருமே இன்று சிறப்பாக பவுலிங் செய்தனர்.

டு பிளசிஸ்
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டு பிளசிஸ் மிகவும் சிறப்பாக பீல்டிங் செய்தார். முதலில் வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்திலேயே மிட் ஆப்பிற்கும் எக்ஸ்டிரா கவருக்கும் இடையில் கேட்ச் கொடுத்தார். அதை பிடிக்க வேகமாக ஓடி வந்த டு பிளசிஸ், தாவி விழுந்து பந்தை மிஸ் செய்தார். இந்த கேட்சை அவர் பிடிக்கவில்லை என்றாலும் கூட மிகவும் சிறப்பாக ட்ரை செய்தார்.

வெங்கடேஷ்
அதன்பின் அடுத்த ஓவரிலேயே வெங்கடேஷ் ஐயர் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். முந்தைய ஓவரில் வெங்கடேஷ் கேட்ச் கொடுத்த போது அதை பிடிப்பதற்காக டு பிளசிஸ் கஷ்டப்பட்டு தாவினார். இதில் அவரின் காலில் அடிபட்டது. முக்கியமாக முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டது. விரலிலும் காயம் ஏற்பட்டது.

காயம்
இதில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு ரத்தம் வந்தது. இதனால் டு பிளசிஸ் பேண்ட் முன்பக்கத்தில் சிவப்பு நிறமாக மாறியது. முட்டி பகுதியில் சிவப்பாக மாறி ரத்தம் வெளியே தெரிய தொடங்கியது. ஆனாலும் டு பிளசிஸ் தொடர்ந்து கவலையின்றி ஆடினார். வாட்சன் மும்பைக்கு எதிரான ஐபிஎல் பைனலில் இதேபோல்தான் காலில் ரத்தம் வர வர ஆடினார்.

பேண்ட் முழுக்க சிவப்பு
பேண்ட் முழுக்க சிவப்பாக மாறியும் அவர் அதிரடியாக ஆடினார். இன்று அதேபோல் டு பிளசிஸ் காலில் ரத்தம் வந்தும் ஆடினார். அதோடு அவர் ஹசல்வுட் ஓவரில் இயான் மோர்கன் அடித்த பந்தை சிக்ஸர் லைனலில் வைத்து சிறப்பாக கேட்சும் பிடித்தார். காலில் காயம் ஏற்பட்ட பின்பும் அவர் ரத்தம் வந்ததை பற்றியும் கவலைப்படாமல் இந்த கடினமான கேட்சை பிடித்தது பலரையும் வியக்க வைத்தது.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications