இவர்தான் மென்டரா.. நீங்க எடுத்தது சரியான முடிவா?.. மீண்டும் தோனி செய்த காரியம்.. கொதித்த ரசிகர்கள்!
சென்னை: தோனி மீண்டும் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பி வருவது ரசிகர்கள் இடையே கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பல ரசிகர்கள் தோனியை இதனால் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
Recommended Video
ஐபிஎல் 2021 தொடர் கொரோனா பிரேக்கிற்கு பின் மீண்டும் நடந்து வருகிறது. முன்பு இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி ஆட்டம் இந்த முறை அமீரகத்தில் நடந்து வருகிறது. அமீரகத்தில் 2020 சீசனில் சிஎஸ்கே அணி மோசமாக சொதப்பியது.அமீரகத்தில் நடந்த போட்டியில் சிஎஸ்கே ப்ளே ஆப் கூட செல்லவில்லை.
இந்த நிலையில்தான் இந்த சீசனிலும் இரண்டாம் பாதி ஆட்டம் அமீரகத்தில் நடப்பதால் சிஎஸ்கே கொஞ்சம் குழப்பமான மனநிலையுடன் களமிறங்கியது. இந்த சீஸனின் முதல் பாதியில் சிஎஸ்கே அணி மிகவும் சிறப்பாகவே ஆடி இருந்தது. அணி மிகவும் வலிமையாகவே இருந்தது.

மோசம்
ஆனால் இன்று மும்பைக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் சிஎஸ்கே மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரூத்துராஜ், டு பிளசிஸ், அம்பதி ராயுடு, ரெய்னா, மொயின் அலி என்று எல்லோரும் சிறப்பாக ஆடினார். முக்கியமாக மொயின் அலி இந்த சீஸனின் தொடக்கத்தில் மிக சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங்கை செய்து இருந்தார்.

அதே அணி
இதனால் இன்று அணியில் பெரிய மாற்றம் இன்றி சிஎஸ்கே களமிறங்கியது. சாம் கரண் மட்டுமே வழக்கமான சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இன்று சிஎஸ்கே சார்பாக டு பிளசிஸ், ரூத்துராஜ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ, ஷரத்துல் தாக்கூர், தீபக் சாகர், ஹசல்வுட் ஆகியோர் களமிறங்கினார்கள்.

மும்பை
மும்பை அணியில் இன்று ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. மும்பை அணியில் டி காக், இஷான் கிஷான், சூர்யா குமார் யாதவ், அன்மோல்பிரீத் சிங், கைரன் பொல்லார்ட், சோரப் திவாரி, குர்ணால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாகர், பும்ரா, போல்ட் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை அணியின் பவுலிங் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இருந்தது.

ரூத்துராஜ்
இன்று ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சிஎஸ்கேவின் பேட்டிங் சீட்டு கட்டு போல சரிந்தது. டு பிளசிஸ், மொயின் அலி டக் அவுட் ஆனார்கள். ராயுடு ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். மூன்று முக்கியமான பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்கவில்லை. ரெய்னா வெறும் நான்கு ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஓப்பனர் ரூத்துராஜ் கெய்காவாட் அதிரடி 58 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரி 88 ரன்கள் எடுத்தார். அதிலும் இரண்டாம் பாதியில் சிஎஸ்கே அணிக்காக ரூத்துராஜ் ருத்ரதாண்டவம் ஆடினார். கடைசி ஓவரில் பும்ராவின் கடைசி பந்தில் இவர் அடித்த ஸ்கூப் சிக்ஸ் அரங்கத்தையே அதிர வைத்தது.

தோனி
இந்த போட்டியிலும் தோனி மோசமாக சொதப்பினார். கடந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோனி 44 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் அதுவும் இல்லை. பெரிதாக ஆங்கர் இன்னிங்ஸ் அல்லது பினிஷிங் இன்னிங்ஸ் ஆடாமல் தோனி சொதப்பி வருகிறார். முக்கியமாக சிஎஸ்கே அணிக்கு அதிகமாக தேவைப்படும் சமயங்களில் கூட தோனியால் பெரிதாக ஆட முடியவில்லை. பல வருடம் ஐபிஎல், சர்வதேச டி 20 போட்டிகளில் ஆடி இருந்தும் கூட தோனியால் கடந்த இரண்டு வருடமாக சிஎஸ்கே அணிக்காக சரியாக ஆட முடியவில்லை. டி 20 பார்மெட்டில் மொத்தமாக இவர் டச் இல்லையோ என்று தோன்றும் அளவிற்கு தோனி மோசமாக ஆடி வருகிறார்.

மோசமான ஆட்டம்
அதிலும் கடந்த இரண்டு வருடத்தில் அப்பர் ஆர்டர், லோவர் ஆர்டர் என்று வெவ்வேறு இடங்களில் தோனி பேட்டிங் இறங்கி பார்த்துவிட்டார். ஆனாலும் இவரால் எந்த இடத்திலும் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இன்றும் கூட ரூத்துராஜ் போன்ற இளம் வீரர் சிஎஸ்கே அணிக்காக மிக கடினமான சூழ்நிலையில் நன்றாக ஆடி அணியை மீட்டார். ஆனால் தோனி பொறுப்பாக ஆட வேண்டிய நேரத்தில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மீண்டும் தோனியை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். முக்கியமாக தோனியை இந்திய டி 20 உலகக் கோப்பை அணியின் ஆலோசகராக நியமித்துள்ளார்.

பிசிசிஐ
பிசிசிஐயின் முடிவிற்கு எதிராக இணையத்தில் இன்று பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தோனி நல்ல பார்மில் இல்லை. அவரின் ஆட்டம் கடந்த இரண்டு வருடமாக மோசமாகி இருக்கிறது. அவரை ஏன் இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்க வேண்டும். ஏற்கனவே இந்திய அணிக்கு பயிற்சியாளர் இருக்கிறார். ரோஹித், கோலி போன்ற மூத்த வீரர்கள் உள்ளனர்.

தோனி
தோனி ஏன் கூடுதலாக ஆலோசகர். அவரே சரியான பார்மில் இல்லாத போது அவர் எப்படி இந்திய அணிக்கு ஆலோசனை வழங்குவார் என்று பிசிசிஐ அமைப்பை டேக் செய்து பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். முக்கியமாக தோனி இரண்டு வருடமாக சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை. இப்படி இருக்கும் போது தோனி எப்படி இந்திய வீரருக்கு சர்வதேச டி 20 போட்டியில் ஆலோசனை வழங்குவார் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications