‛சுரேஷ் ரெய்னா'.. தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் ‛சின்ன தல'.. இயக்குநர் - இசையமைப்பாளர் யார் தெரியுமா?
சென்னை: இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்த திரைப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணிக்காக நீண்ட காலமாக விளையாடினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் தோனிக்கு, அடுத்ததாக சுரேஷ் ரெய்னாவுக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர். தோனியை தல எனவும், சுரேஷ் ரெய்னாவை சின்ன தல எனவும் ரசிகர்கள் அழைத்தனர். அதன்பிறகு சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி புறக்கணித்தது. ஏலத்திலும் எடுக்கவில்லை.
தற்போது சுரேஷ் ரெய்னா ஓய்வில் உள்ளார். இதற்கிடையே தான் சுரேஷ் ரெய்னா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்துக்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே பங்கேற்று படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டார்.
இந்த விழாவில் சுரேஷ் ரெய்னா வீடியோ கால் மூலமாக பங்கேற்றார். அவர் நேரில் வரவில்லை. தற்போது சுரேஷ் ரெய்னா குடும்பத்துடன் வெளிநாட்டில் உள்ளதால் அவரால் நேரில் பங்கேற்க முடியவில்லை. இந்த விழாவில் சுரேஷ் ரெய்னா பேசும்போது, ‛‛ இது ஒரு கிரிக்கெட் சார்ந்த படம் என்பதால் தமிழ்நாட்டிலிருந்து தொடங்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் பல ஆண்டுகளாக சிஎஸ்கேவுக்காக சென்னையில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். எங்கள் மீது தமிழக மக்களுக்கு நிறைய அன்பு, விருப்பம் மற்றும் நிறைய பாசம் உள்ளது'' என்றார்.
இதன்மூலம் இந்த திரைப்படத்தின் கதைக்களம் கிரிக்கெட்டை மையப்படுத்தி இருக்கும் என்பதை சுரேஷ் ரெய்னா உறுதி செய்துள்ளார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் லோகன் படத்தை இயக்குகிறார். சுரேஷ் ரெய்னா ஹீரோவாக ஜொலிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.
இந்த விழாவில் இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்கனவே முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆன நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னாவும் தமிழில் ஹீரோவாக களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications