கவர் போட்டோ தான் சிக்னலே! 7 வருஷத்தில் 5 முறை கட்சி தாவிய நடுமுதலைக்குளம் சிடிஆர் நிர்மல்குமார்!
சென்னை: பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற சிடிஆர் நிர்மல் குமார் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைகிறார். எக்ஸ் வலைதள முகப்பு பக்கத்தில் கவர் போட்டோவை மாற்றினாலே அவர் கட்சி மாற போகிறார் என்பதற்கான சிக்னல் எனவும், இதுவரை ஏழு ஆண்டுகளில் ஐந்து முறை கட்சி தாவி இருக்கிறார் நிர்மல் குமார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..
தமிழக பாஜகவில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற போது கட்சியில் இணைந்தவர்களில் முக்கியமானவர் சிடிஆர் நிர்மல் குமார். ஐ.டி விங் தலைவராக செயல்பட்டு வந்த அவர் பாஜக குறித்த எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு சுடச் சுட பதில் கொடுத்து வந்தார்.

குறிப்பாக அப்போது எதிர் கட்சியாக இருந்த திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த அவர் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது, கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாஜகவில் இருந்து விலகிய அவர் அதிமுகவில் இணைந்தார்.
" கட்சிக்காக முடிந்தவரை உழைத்தேன். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாகவே பல நூறு முறை கட்சியில் இருந்து விலகுவது குறித்து சிந்தித்து முடிவெடுத்ததாக தெரிவித்து இருந்தார். மேலும் அண்ணாமலை மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் சிடிஆர் நிர்மல் குமார். கட்சி தொண்டர்களை தலைவராக இருக்கும் அண்ணாமலை வேவு பார்க்கிறார், தொண்டர்களை மதிப்பதில்லை, திமுக அமைச்சருடன் திரை மறைவில் பேரம் பேசுகிறார், அமைச்சர்களை விட ஊழல் செய்கிறார் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தொடர்ந்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் சிடிஆர். பொதுவாக கட்சி தாவல் என்றாலே சிடிஆர் நிர்மல் குமார் ட்விட்டர் பக்கத்தின் கவர் போட்டோவை மாற்றம் செய்வது வழக்கம். பாஜகவில் இருந்த போது அண்ணாமலை, எல் முருகன், எச் ராஜா ஆகியோருடன் கைகளை உயர்த்தியபடி இருக்கும் போட்டோவை வைத்திருந்த அவர் உடனடியாக அதனை நீக்கினார்.

தொடர்ந்து அதிமுகவில் இணைந்த பிறகு 'எடப்பாடியார் ஃபார் எவர்' என ஆங்கிலத்தில் அவர் போட்டோவை வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று அவரது பக்கத்தில் கவர் போட்டோ மாற்றப்பட்டது. இதனால் அவர் கட்சி தாவுவது உறுதி எனக் கூறப்பட்ட நிலையில் திடீரென விஜயை சந்தித்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருக்கிறார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை கட்சி தாவி இருக்கிறார் சிடிஆர் நிர்மல் குமார். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவர் 2018 ஆம் ஆண்டு டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர் 2023 மார்ச் மாதம் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடு முதலைக்குளத்தை சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார், ஐடி பிரிவிலும், தரவுகளை சேகரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர். தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பணிகளுக்கும், ஐடிவிங்கை பலப்படுத்துவதற்கும் நிர்மல் குமாரின் பங்கு உதவிகரமாக இருக்கும் என்கின்றனர் அந்த கட்சியினர்.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு!












Click it and Unblock the Notifications