மின் வெட்டு ஏற்பட்டால் கோபப்படக் கூடாது.. ஊழியர்களுக்கு நேரம் கொடுங்கள்.. சிடிஆர் நிர்மல்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின் வெட்டு ஏற்படும் போது மக்கள் கோபப்படாமல், மின் வாரிய ஊழியர்கள் பணியாற்ற நேரம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் 6 ஆயிரம் டிரான்ஸ்ஃபார்மர்கள் மாற்றி அமைக்க உள்ளதாக கூறிய சிடிஆர் நிர்மல்குமார், மின் வெட்டு பிரச்சனைகளை ஒருங்கிணைக்க புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே தொடர்ச்சியாக மின் வெட்டு அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுவதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. முதல்வரின் பெரம்பூர் தொகுதியிலேயே மின் வெட்டு காரணமாக மக்கள் குடும்பமாக போராடும் நிலை இருக்கிறது.

CTR Nirmal Kumar

இந்த நிலையில் முதல்வர் விஜய் அண்ணாசாலையில் உள்ள மின்னகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசுகையில், தமிழ்நாட்டின் மின்சார தேவை எப்படி இருக்கிறது? அடுத்த ஜூலை வரை எப்படி சமாளிக்க போகிறோம் என்பதை ஆய்வு செய்தார். அடுத்த ஆண்டு மின்சார தேவை அதிகமாக இருக்கும். எல் நினோ காரணமாக வெப்பம் அதிகரிக்கும்.

அதனால் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகா வாட் அதிகமாக தேவைப்படும். மத்திய தொகுப்பிலும் மின்சார தட்டுப்பாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் 600க்கும் அதிகமான துணை மின் நிலையங்கள் தேவையாக இருக்கிறது. சில துணை மின் நிலையங்களில் அதிக அழுத்தம் காரணமாக தீப்பிடிக்கிறது. ஏற்கனவே 600 மின் துணை நிலையங்கள் தொடர்பாக அறிவித்துவிட்டோம்.

அதேபோல் டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. நடப்பாண்டில் 6000 டிரான்ஸ்ஃபார்மர்களையாவது மாற்ற முயற்சிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முதல்வர் விஜய்யிடம் கூறியுள்ளோம். பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டிய தேவைகள் இருக்கிறது. செப்டம்பர் மாதத்திலும் பராமரிப்பு பணிகளை செய்ய முடியவில்லை.

அதனால் அதனை 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறோம். இதனாலும் சில பிரச்சனைகள் வருகிறது. சோசியல் மீடியாவில் மின் வெட்டு தொடர்பான புகார்களை ஒருங்கிணைக்க பணிகள் நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் டெண்டர் விடப்பட்டு, அதனை சரி செய்வோம். அதேபோல் மக்களின் கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், மின் வாரிய ஊழியர்கள் பணியாற்ற அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும்.

மின் வாரிய ஊழியர்களுக்கு மக்கள் நேரம் கொடுக்க வேண்டும். 18 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் பேட்டரி ஸ்டோரேஜ் மூலமாக மின்சாரத்தை சேமிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+