ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு.. சட்டசபையில் கலைஞரை குறிப்பிட்ட சிடிஆர் நிர்மல்குமார்! பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் ஏற்கனவே தமிழ்நாடு பார்த்துவிட்டது என்று கலைஞர் கருணாநிதியை குறிப்பிட்டு பேசி இருந்தார். இந்த நிலையில் கலைஞர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது ஏன் என்பது தொடர்பாக பார்க்கலாம்.

சட்டசபையில் 2 நாட்களுக்கு முன் முதல்வர் விஜய் பேசுகையில், திமுக ஆட்சியில் 3 துறைகளில் நடந்ததற்கான ஆதாரங்கள் என் மேஜையில் உள்ளது. அதனை திறந்து வைத்துவிட வேண்டாம்.. அதனை எப்போது வெளியிட வேண்டுமோ, அப்போது திறக்கப்படும் என்று பேசி இருந்தார். இதுதொடர்பாக இன்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசி இருந்தார்.

CTR Nirmalkumar Kalaignar Karunanithi DMK

அதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், டேபிள் முன் இருக்கும் ஃபைல்களை திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று முதல்வர் பேசி இருந்தார். அதனை திறந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜோசியக்காரன் சொன்னால் தான் அதனை திறந்து பார்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து எதிர்க்கட்சி கேள்வி எழுப்பினால், நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பதிலை கொடுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இதற்கு எழுந்து அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதில் அளிக்கையில், ஜோசியம் என்று சொன்னார்கள்.. ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் ஏற்கனவே தமிழ்நாடு பார்த்துவிட்டது. அதனால் எதை செய்தாலும் எந்த ஒளிவுமறைவின்றி செய்ய தெரியும். எல்லா துறைகளிலும் விதிமீறல் இருந்தால், வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அமைச்சார் சிடிஆர் நிர்மல்குமார் ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு அணிந்து வரலாறு என்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை குறிப்பிட்டதாகவே தெரிகிறது. 1994ஆம் ஆண்டு முதலே கலைஞர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிய தொடங்கினார். 1994ல் அவருடைய கன்னத்தில் சிறிய வீக்கம் ஏற்பட்டது. அவருடைய உமிழ்நீர்ச் சுரப்பில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக இது ஏற்பட்டது.

அப்போது மருத்துவர்கள் தரப்பில் கன்னம் பகுதியை கதகதப்பாக வைத்து கொள்ள சால்வை ஒன்றை அணிந்தால் நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது 1989ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் மிகவும் பிற்படுத்தவர் பட்டியல் என்று ஒன்று வெளியிட்டு அதில் வன்னியர்களையும் இனைத்து 20 சதவிகிதம் கொடுத்தார்.

அப்போது வன்னியர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ராமதாஸ் மஞ்சள் துண்டை கலைஞர் கருணாநிதிக்கு அணிவித்தார். அந்த மஞ்சள் துண்டு கலைஞருக்கு பிடித்து போனதால், கடைசி வரை மஞ்சள் துண்டுடனே வலம் வந்தார். எத்தனையோ விமர்சனங்கள் கலைஞர் மீது வைக்கப்பட்ட போதும், அவர் மஞ்சள் துண்டு அணிவதை கைவிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+