சிறார்களிடையே மது பழக்கம்.. தடுக்க புதிய முயற்சி! டாஸ்மாக் நிர்வாகம் போட்ட உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் சிறார்களிடையே அதிகரித்து வரும் மது பழக்கத்தை குறைக்கும் நோக்கில், இனி 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்ய கூடாது என்றும், மீறி செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றிற்கு பக்கத்தில் இருக்கும் சுமார் 700க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உத்தரவு பொதுமக்களால்.. குறிப்பாக பெண்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, தற்போது சிறார்களிடையே நிலவும் மது பழக்கத்தை கட்டுப்படுத்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இனி 21 வயது குறைந்தோருக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
சீரியஸாகும் டாஸ்மாக் மேட்டர்
தமிழ வெற்றிக் கழகம் இந்த தேர்தலை எதிர்கொண்டபோது டாஸ்மாக் விவகாரத்தை பெரிய விஷயமாக முன்னிறுத்தியிருந்தது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் என விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பாட்டு கூட பாடியிருந்தார். எனவே விஜய் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகயை மூட என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று பரவலாக எதிர்பார்ப்பு இருந்தது.
குறிப்பாக பெண்கள் விஜய் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். டாஸ்மாக் கடைகளால்தான் குடும்ப வன்முறை நடக்கிறது என்றும், அந்த கடைகளை மூடினால் புண்ணியமாக போகும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். எனவே இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்த விஜய், முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் அதிரடியாக 700க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்துதான் சிறார்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டம் ஏற்கெனவே 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறது. இப்படி இருக்கையில், கறார் உத்தரவு மூலம் ஏதோ புது விஷயத்தை தான் கொண்டு வந்ததை போல விஜய் காட்டிக்கொள்கிறார் என்று விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. எப்படி இருப்பினும் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது இல்லை என்கிற கறார் உத்தரவு மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications