இந்த ஒரு திட்டத்தில் சேர்ந்தால் போதும்.. தமிழக அரசே ரூ.1 லட்சம் தரும்.. நிதி அமைச்சர் அறிவிப்பு!
சென்னை: வீட்டு மின் கட்டண சுமையைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மாநில அளவில் பிரம்மாண்டமான வீட்டு மேற்கூரை சூரிய மின் மானிய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் டாக்டர் N. மேரி வில்சன் வெளியிட்ட இந்த அறிவிப்பு, தமிழகத்தின் நடுத்தர மற்றும் எளிய குடும்பங்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரூ.1 லட்சம் வரை பெருமளவிலான மானியம்
வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவி மின்சாரம் தயாரிப்பதை மாநிலம் தழுவிய அளவில் இயக்கமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தங்களது வீடுகளில் சூரிய மின்பலகை அமைக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கணக்கீட்டு திறனின் அடிப்படையில் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரவும், முதற்கட்டமாக அதிகளவிலான வீடுகளுக்கு இச்சலுகையை கொண்டு சேர்க்கவும் ரூ.50 கோடி பிரத்யேக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத்திலிருந்து முழுமையான விடுதலை!
தமிழகத்தில் கோடைகாலங்களிலும், சராசரி மாதங்களிலும் வீட்டு உபயோக மின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த சோலார் மானிய திட்டம் மக்களின் மின் கட்டணத்தை கணிசமாகக் குறைக்கும்

சுயசார்பு மின் உற்பத்தி: வீடுகளிலேயே தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை தயாரித்துக்கொள்ள முடியும்.
நெட் மீட்டரிங் வசதி: அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பிற்கு (Grid) திருப்பி அனுப்பி, மின் கட்டணத்தில் சலுகை அல்லது வருமானம் பெற வழிவகை செய்யப்படும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் கரியமில வாயு உமிழ்வு பெருமளவு குறையும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் செயல்படுத்தும் முகமை
இத்திட்டம் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.
தகுதிவாய்ந்த நுகர்வோர்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களின் மின் இணைப்பு எண் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த மானியத்திற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம்.
பட்ஜெட் அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிதியமைச்சர் மரிய வில்சன், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டு பல்வேறு பிரம்மாண்டமான திட்டங்களை அறிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி, விளையாட்டுத் துறை மேம்பாடு மற்றும் உயர்கல்வி சீரமைப்பு என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கிய மகிழ்ச்சியான தருணம். பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதி, அவர்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை அண்ணன் சீராக'நமது அரசு வழங்கவுள்ளது என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இத்திட்டத்திற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளின் ஆரம்பகால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப தமிழகத்தை அதிநவீன மாநிலமாக உருவாக்கும் இலக்கின் கீழ், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை: ஒட்டுமொத்தமாக ரூ.44,527 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வித் துறை: ரூ.8,393 கோடி ஒதுக்கீடு. வெற்றி மடிக்கணினி திட்டம்: கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை உயர்த்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
AI பாடத்திட்டம்: உலகத் தரத்திலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் அடங்கிய 'நிபுணர் குழு' அமைக்கப்படும். பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு AI திறன் பயிற்சி அளிக்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலையங்கள்: ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) நிறுவப்படும்.
சிறப்பு அரசு சட்டக்கல்லூரி: சட்டக் கல்வியை மேம்படுத்த புதிய சிறப்பு அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும், என்று அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
