சட்டசபையிலேயே வெடித்த மோதல்.. அவைக்குள்ளேயே கோபத்தின் உச்சிக்கே சென்ற சிவி சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில், அதிமுக சார்பாக தளவாய் சுந்தரத்தை பேச சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அழைத்தார். ஆனால் தனக்கு முதலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் மயிலம் தொகுதி எம்.எல்.ஏவுமான சிவி சண்முகம் தனக்கு பேச அனுமதி வேண்டும் எனக் கோரி கடும் கோபம் அடைந்தார். தனக்கு பேச அனுமதி தரவேண்டும் என்று ஆவேசமாக கேட்ட சிவி சண்முகம் அவையில் இருந்து கிளம்பி வெளியே போவது போல சென்றார்.

தமிழக சட்டசபையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் விஜய் கொண்டு வந்த இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அரசினர் தனித்தீர்மானம் மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் பேசினர். திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ரகுபதி தீர்மானம் மீது பேசினார்.

CV Shanmugam Show his dissatisfaction the Assembly opposing AIADMKThalavai Sundaram speaking first

அதற்கு பிறகு, அதிமுக சார்பாக தளவாய் சுந்தரத்தை பேச சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அழைத்தார். ஆனால் தனக்கு முதலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் மயிலம் தொகுதி எம்.எல்.ஏவுமான சிவி சண்முகம் தனக்கு பேச அனுமதி வேண்டும் எனக்கோரி கடும் கோபம் அடைந்தார். தனக்கு பேச அனுமதி தரவேண்டும் என்று ஆவேசமாக கேட்ட சிவி சண்முகம் அவையில் இருந்து கிளம்பி வெளியே போவது போல சென்றார்.

உடனடியாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சிவி சண்முகத்திடம் உங்களுக்கு அடுத்து பேச வாய்ப்பு தருகிறேன் என்று கூறி சமாதானப்படுத்தினார். சிவி சண்முகத்திற்கு முன் இருக்கையில் இருந்த எம்.எல்.ஏ கேபி அனபழகனும் எழுந்து சென்று சிவி சண்முகத்தை இருக்கையில் அமர வைத்தார். இதன்பிறகே சிவி சண்முகம் சமாதானம் ஆனார். தளவாய் சுந்தரம் பேசி முடித்த பிறகு, சிவி சண்முகத்திற்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதிமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சிவி சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து, அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை எடுக்க எடப்பாடி பழனிசாமி சட்ட ரீதியான நடவடிக்கையை எடுத்தார். இதில், 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மீதமுள்ள எம்.எல்.ஏக்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இருந்த போதிலும் அதிமுகவில் உட்கட்சி பூசல் முடிந்த பாடில்லை. இது சட்டமன்றத்திலும் தொடக்கத்தில் இருந்தே எதிரொலித்து வரும் நிலையில், இன்று அதிமுக எம்.எல்.ஏ முதலில் பேசுவதற்கு சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தது கட்சியில் நிலவும் மோதலை அவையிலே வெளிப்படையாக காட்டுவதாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+