Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்துட்டாய்ங்கய்யா..! “நம்ப முடியாத விலையில் தீபாவளி பட்டாசு”.. சைபர் கிரைம் போலீசார் பரபர வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி நெருங்கி வரும் சூழலில், மிகக் குறைவான விலையில் பட்டாசு விற்பனை என்ற பெயரில் ஆன்லைன் மோசடி கும்பல் களமிறங்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடும் மிக முக்கியமான இந்து பண்டிகை தீபாவளி. மக்கள் ஏற்கனவே தங்கள் வீடுகளை சுத்தம் செய்வது தொடங்கி, புதிய ஆடைகள் வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது, இனிப்புகள் - பலகாரங்கள் செய்வதற்கான பொருட்கள் வாங்குவது என தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Cyber crime police warns about fraud gangs targets who want to buy diwali crackers via online

குழந்தைகள், சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் இப்போதே பட்டாசு சத்தங்களும் கேட்கத் தொடங்கிவிட்டன. பலர், ஆன்லைன் வாயிலாகவும், பட்டாசு ஆர்டர் செய்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்களைக் குறி வைத்து ஏராளமான மோசடி கும்பல்களும் களமிறங்கியுள்ளன. நம்ப முடியாத விலையில் பட்டாசு தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, பண மோசடி செய்யும் கும்பல்கள் பெருகியுள்ளன.

சீசனுக்கு சீசன் உருமாறும் ஃப்ராடு கும்பல் இப்போது தீபாவளி பட்டாசு விற்பனை ரூபத்தில் வந்துள்ளது. இந்நிலையில், ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை செய்வதாக கூறி மோசடிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்குமாறும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிராஞ்ச், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சைபர் கிரைம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், இதனைப் பயன்படுத்திக் கொண்டு சைபர் குற்றவாளிகள் சிலர் போலி இணையதளங்களை உருவாக்கி நம்பமுடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இந்த மோசடித் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்கள் யூடியூபில் நம்ப முடியாத மிக குறைந்த விலையில் பட்டாசு கிடைப்பதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு ஆர்டரைப் பற்றி விசாரிக்கின்றனர். அப்போது கஸ்டமர் கேர் சார்பில் பேசும் நபர் அவர்களுக்கு பதிலளித்து பின்பு தாங்கள் ஆர்டர் செய்த ஸ்கிரீன் ஷாட்டைப் பகிருமாறு தெரிவிக்கின்றனர். உடனே பொதுமக்கள் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள https://luckycrackers.com/ என்ற இணையதளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்த பின்பு வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஆர்டரின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகின்றனர்.

ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட தொடர்பு எண் மற்றும் இணையதளத்தை மோசடி கும்பல் முடக்கி விடுகிறது. இவ்வாறு குறைந்த விலையில் பட்டாசு விற்பனை செய்வதாக கூறி மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 1 மாதத்தில் மட்டும் இது தொடர்பாக 25 வழக்குகள் பதிவாகியுள்ளன.

எனவே நீங்கள் பட்டாசு வாங்கும் இணைய தளத்தின் சட்டபூர்வமான தன்மை, வாடிக்கையாளர் மதிப்புரை, அலுவலக முகவரி, மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேன்ட்லைன் எண் இணையதளத்தில் உள்ளதா எனச் சரிபார்த்து பணத்தை செலுத்தி வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக, பிரபலம் இல்லாத இணையதளங்களுக்கு, கேஷ் ஆன் டெலிவரி விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

Cyber crime police warns about fraud gangs targets who want to buy diwali crackers via online

மேலும் போலி இணையதளத்தில் ஏதேனும் தனிப்பட்ட தகவலைப் பகிர்ந்திருந்தால், உடனே கடவுச் சொற்களை மாற்றி வங்கிக் கணக்குகளைக் கண்காணிப்பது அவசியம். ஸ்கிரீன் ஷாட் மின்னஞ்சல் தகவல் தொடர்புகள் மற்றும் இணையதளத்தில் உள்ள தொடர்பு விவரங்கள் உட்பட உங்கள் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்திருக்க வேண்டும், மோசடி குறித்து புகாரளிக்க வேண்டும் என்றால் இந்தப் பதிவுகள் முக்கியமானது.

இந்த மோசடியில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் உடனே சைபர் கிரைமின் கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள், நம்பகமற்ற ஆன்லைன் தளங்களில் பட்டாசு வாங்குவதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+