சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல் மாநிலமே இதுதான்.. இந்தியாவில் 2020-ல் மட்டும் 50 ஆயிரம் சைபர் குற்றங்கள்.. என்சிஆர்பி தகவல்

2020ம் ஆண்டில் மட்டும் 50 ஆயிரம் சைபர் குற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: நம் நாட்டில் 2020ம் ஆண்டில் மட்டும் 50 ஆயிரம் சைபர் குற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது..

இந்தியாவில் நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது... லாக்டவுன் காலத்திலும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்தது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏகப்பட்ட குற்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன..

அந்த வகையில், வருடந்தோறும் நாட்டின் குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய தேசிய குற்ற ஆவண காப்பகமும் (என்சிஆர்பி) தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வரும்.. அப்படித்தான், கடந்த 2020ம் ஆண்டுக்கான குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுள்ளன..

 புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: துலாம், விருச்சிகம்,தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும் புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: துலாம், விருச்சிகம்,தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும்

 என்சிஆர்பி

என்சிஆர்பி

இது தொடர்பாக இன்று ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில் உள்ளதாவது: ''2020-ல் நாட்டில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்து 35 குற்றங்கள் நடந்துள்ளன... இது கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 11.8 சதவீதம் அதிகமாகும்.. ஒரு லட்சம் பேருக்கு என்ற விகிதத்தில் சைபர் குற்றங்களை எடுத்துக்கொண்டாலும், கடந்த 2019-ல் 3.3 சதவீதம் இருந்த நிலையில், 2020-ல் 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.. கடந்த 2019-ல் சைபர் குற்றங்கள் 44,735 ஆக இருந்த நிலையில், 2018-ல் அது 27,248 ஆக உயர்ந்துள்ளது.

 குழந்தைகள்

குழந்தைகள்

2020-ல் மட்டும், 4,047 வங்கி மோசடிகள், 1093 ஓடிபி (ODP) மோசடிகள், 1,195 கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகள், 2,160 ஏடிஎம் தொடர்பான சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. சோஷியல் மீடியாக்களின் போலிச் செய்திகள் தொடர்பாக 578 சம்பவங்கள் நடந்துள்ளன... இணையதளம் மூலம் பெண்களை, குழந்தைகளை மனரீதியாக துன்புறுத்துதல் தொடர்பாக 972 வழக்குகளும், போலியான கணக்கு வைத்து மோசடி செய்ததாக 149 வழக்குகளும், புள்ளிவிவரங்களை திருடியதாக 98 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

 வழக்குகள்

வழக்குகள்

கடந்த வருடம் நடந்த சைபர் குற்றங்களில் 60 சதவீதம், வெறும் மோசடி குற்றங்கள்தான் அதிகம் நடந்துள்ளன. அதாவது 50,035 சைபர் குற்றங்களில் 30,142 வழக்குகள் மோசடி ரீதியான குற்றங்களாக உள்ளன... மேலும் பாலியல் துன்புறுத்தல், பயன்படுத்துதல் தொடர்பாக 3,293 வழக்குகள் (6%), மிரட்டல் தொடர்பாக 2,400 வழக்குகள் (4.9%) பதிவாகியுள்ளன.

 கிரைம்

கிரைம்

இந்தியாவிலேயே அதிக அளவு கிரைம் குற்றங்கள் பாஜகவின் உத்திரபிரதேசத்தில்தான் நடந்துள்ளது.. இங்கு மட்டும் 11,97 வழக்குகளும், கர்நாடகாவில் 10,741 வழக்குகளும், மகாராஷ்டிாவில் 5,496 வழக்குகளும், தெலங்கானாவில் 5,024 வழக்குகளும், அசாமில் 3,530 வழக்குகளும் பதிவாகியுள்ளன... அதேபோல, நாடு முழுவதும் 8,34,947 கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன... அவற்றின் மதிப்பு ரூ.92.18 கோடியாகும்... நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் கொரோனா காலத்தில் 130.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

 வழக்குகள்

வழக்குகள்

குற்றவீதங்கள் அடிப்படையில் கர்நாடகத்தில் 16.2 சதவீதமும், தெலங்கானாவில் 13.4 சதவீதமும், அசாமில் 10.1 சதவீதமும், உபியில் 4.8 சதவீதமும், மகாராஷ்டிராவில் 4.4 சதவீதமும் பதிவாகியுள்ளன... ஆனால் தலைநகர் டெல்லியில் 168 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது" என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

 உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்

ஆக, நாட்டிலேயே அதிக அளவு குற்றங்கள் நடப்பது உத்தரபிரதேசத்தில்தான் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.. இப்படித்தான் 2018-லும் பெண்களுக்கு எதிராக குற்றம் செய்ததாக 3,78,777 கேஸ்கள் மொத்தமாக பதிவாகி இருந்தன.. இதில், உபியில் மட்டும், 59 ஆயிரத்து 445 கேஸ்கள் பதிவாகின.. அதாவது தேசம் முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த வழக்குகளில் 15.8 சதவீத குற்றங்கள் இந்த மாநிலத்தில்தான் நடந்திருந்தது. 4,322 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.. புகார் தரப்பட்டு பதிவான வழக்குகள்தான் இவையெல்லாம்.. ஆனால், கேஸ் போடாமலேயே எத்தனையோ குற்றங்கள் கணக்கிலடங்காதது...

 எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

இந்த வருடமும் உபியே முதல் இடத்தில் உள்ளது.. அந்த மாநிலத்தில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கண்டித்தும், மாநில பாஜகவின் ஆட்சியை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.. எனினும், அந்த மாநிலத்தில் குற்றங்கள் குறையவில்லை என்பது என்சிஆர்பி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

English summary
Cyber crimes registered 11.8% increase last year, CRRB Report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X