11ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள், தலைக்கவசம், வாட்டர் பாட்டில்.. டெண்டர் கோரிய தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நவீன் சைக்கிள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. மொத்தமாக 5,32,388 சைக்கிள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், டெண்டர் கோரி நாளை முதல் செப்டம்பர் 28 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவரளுக்கு ரூ.277 மதிப்பில் நவீன சைக்கிள், வாட்டர் பாட்டில், தலைக்கவசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை திமுகவும் தொடர்ந்து வந்தது. தற்போது தவெக அதனை நவீன சைக்கிளாக மாற்றி அறிவித்திருந்தது.

Cycle Scheme Vijay TVK

இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நவீன சைக்கில் கொள்முதல் செய்வதற்கு தமிழக டெண்டர் கோரி உள்ளது. மொத்தமாக மாணவர்களுக்கு 2,37,133 சைக்கிள் உடன் தலைகவசம், தண்ணீர் பாட்டில் வழங்கவும், மாணவிகளுக்கு 2,95,255 நவீன சைக்கிளும், தலைவசகம் மற்ரும் தண்ணீர் பாட்டில் என்று மொத்தமாக 5,32,388 நவீன சைக்கிள், தலைகவசம், தண்ணீர் பாட்டில் கோரப்பட்டுள்ளது.

இந்த டெண்டரை பெற விரும்பும் நிறுவனங்கள் நாளை முதல் செப்டம்பர் 28 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவ மற்றும் மாணவிகளுக்கான மாதிரி சைக்கிள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் இன்று மாலை 5 மணி ஆகும். இதனை எழிலகம் இணைப்பு கட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல் செப்டம்பர் 29ஆம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு அறிவிக்கப்படும். டெண்டரை கைப்பற்றிய நிறுவனம் 150 நாட்களுக்குள் சைக்கிள்களை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிணை வைப்புத் தொகையாக அந்த நிறுவனம் ரூ.70 லட்சம் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISO தரச்சான்றிதழ் பெற்ற சைக்கிள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து தான் டெண்டர் வரவேற்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நவீன சைக்கிள் கொடுக்கும் திட்டம் முதல்வர் விஜய்யால் தொடங்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+