Cyclone: வங்கக் கடலில் உருவாகிறது ’அர்னாப்’ புயல்.. தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை விடாது! டெல்டா வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், வரும் 23 ஆம் தேதி வாக்கில் புயலாக வலுப்பெறும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புயலுக்கு அர்னாப் என பெயரிடப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதத்தில், கடந்த 165 ஆண்டுகளில் 47 வது புயலாக இந்த புயல் சின்னம் உருவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்தது. நெல்லை, தென்காசி, குமரி, மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தின் கொக்கிரகுளம் பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் போல் மழைநீர் தேங்கியது. தென்காசியில் பெய்த கனமழையால் குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Cyclone Arnab forming in the Bay of Bengal Will Tamil Nadu be affected - Delta Weatherman

புயலாக வலுப்பெறும்

இதனால் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று முழுக்க வெயிலின் அளவு குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது மேலும் வலுப்பெற்று வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி வாக்கில் புயலாக வலுப்பெறும்.

"அர்னாப்" என பெயர்

அப்படி இது புயலாக வலுப்பெறும் பட்சத்தில், இப்புயலுக்கு "அர்னாப்" என பெயர் சூடப்படும். இந்த பெயரை வங்கதேச அரசு பரிந்துரைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் புயல் உருவாவது மிகவும் அரிதான விஷயம். கடந்த 165 ஆண்டுகளில் 47 வது புயலாக இந்த புயல் சின்னம் உருவாக உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 25 ஆண்டுகளில் உருவாகக் கூடிய 4வது புயலாக இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாகவே செப்டம்பர் மாதத்தில் புயல் உருவாவது அரிதிலும் அரிது. அதிலும் குறிப்பாக தமிழகத்தை நோக்கி புயல் வருவது மிக மிக அரிது. அந்த வகையில் இந்த புயலும் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு மிக மிக குறைவு. தமிழக பகுதிகளுக்கு இந்த புயல் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. ஆனால் இந்த சூழலால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கனமழை கொட்டும்

அதாவது இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இடி, மின்னலோடு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள், வடக்கு உள் மாவட்டங்களில் பரவலாக பல இடங்களில் இடி, மின்னலோடு கூடிய மிதமான மழையும், சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 23 ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இரவு, நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் இடி, மின்னலோடு மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+