Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

356.20 மிமீ.. புதிய உச்சத்தை தொட்ட சென்னை.. புரட்டி எடுத்த தீவிர கனமழை.. எங்கு எவ்வளவு பெய்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று அதிகாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை சென்னையில் 356.20 மிமீ மழை பெய்துள்ளது.

தமிழகம் முழுக்க கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுக்க தீவிர கனமழை பெய்தது. முக்கியமாக சென்னையில் மழை பிச்சு எடுத்தது.

அதன்பின் நிவர் புயல் தமிழகத்தை தாக்கிய போது சென்னையில் மழை தீவிரமாக பெய்தது. விழுப்புரம் அருகே நிவர் புயல் கரையை கடந்த காரணத்தால் சென்னையில் அடை மழை பெய்தது. இதனால் சென்னையில் இருக்கும் அணைகள் எல்லாம் வேகமாக நிரம்பியது.

மீண்டும்

மீண்டும்

இந்த நிலையில் தற்போது சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. புரேவி புயல் காரணமாக சென்னையில் விடமால் கனமழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு பெய்தது. அதன்பின் நள்ளிரவில் மழை தீவிரம் எடுத்தது. தற்போது வரை சென்னையில் விடாமல் மழை பெய்து வருகிறது.

எவ்வளவு மழை

எவ்வளவு மழை

நேற்று அதிகாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை சென்னையில் 356.20 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில் அனைத்து பகுதிகளிலும் விடமால் மழை பெய்ததில் சென்னையின் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னையில் நேற்று சராசரியாக ஒவ்வொரு பகுதியிலும் 32.38 மிமீ மழை பெய்துள்ளது.

எங்கு எவ்வளவு மழை

எங்கு எவ்வளவு மழை

சென்னை ஆட்சியர் அலுவலகம் இருக்கும் புரைசைவாக்கம் பகுதியில் 27.20 மிமீ மழை பெய்தது. பெரம்பூர் பகுதியில் - 32 மிமீ மழை பெய்தது. அம்பத்தூரில் - 36 மிமீ மழை பெய்தது. New புதிய தாலுக்கா அலுவலகம் இருக்கும் அயனவராத்தில் - 26.30 மிமீ மழை பெய்தது. நுங்கம்பாக்கம், எக்மோரில் - 25.60 மிமீ மழை பெய்தது. தண்டையார்பேட்டையில் - 37.50 மிமீ மழை பெய்தது.

வேறு எங்கு

வேறு எங்கு

எம்ஜிஆர் நகர், மாம்பலம் பகுதிகளில் - 32.60 மிமீ மழை பெய்தது. கிண்டி அண்ணா பல்கலை பகுதியில் - 44.20 மிமீ மழை பெய்தது.மைலாப்பூர் டிஜிபி அலுவலகம் உள்ள ஏரியாவில் - 38.40 மிமீ மழை பெய்தது. ஆலந்தூரில் - 38.40 மிமீ மழை பெய்தது. சோழிங்கநல்லூரில் - 18 மிமீ மழை பெய்தது. சென்னையில் இந்த பகுதிகளில் இன்றும் தீவிர மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஏற்கனவே அணைகள் நிரம்பி உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+