கஜா கால வாறிடுச்சே.. ஒரே புழுக்கமா இருக்கு.. திடீருன்னு வெயிலும் அடிக்குது.. சென்னை நிலை இதுதான்
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், அவ்வப்போது வெயிலும் அடிக்கிறது.
வங்கக்கடலில் உருவாக்கிய கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு பாம்பன் மற்றும் கடலூர் நடுவே நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 6.30 மணி நிலவரப்படி, வங்கக் கடலில் சென்னைக்கு கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டிருந்தது. இதன் தாக்கம் காரணமாக இன்று அதிகாலை முதலே சென்னையில் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.

காலை மழை
காலை 7 மணி அளவில் கோயம்பேடு, போரூர், பெரம்பூர், திருவான்மியூர், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. காலை 9 மணி நிலவரப்படி, கிழக்கு கடற்கரை சாலை, அடையாறு, ஈக்காடுந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. வானம் மேக மூட்டத்தோடு இருந்தது.

காலை அவதி
இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்வோர் அலுவலகம் செல்வோர் அவதிப்பட்டனர். புயல் மற்றும் மழை காரணமாக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பாக இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புழுக்கம்
ஆனால், காலை 11 மணி நிலவரப்படி நகரின் பல பகுதிகளிலும் புழுக்கம் நிலவியது. வெயிலும் மாறி மாறி அடிக்கிறது. இதனால் சென்னைக்கு போதிய மழை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

6 மாவட்டங்களில் விடுமுறை
கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications