கடலூர்-பாம்பன் நடுவே நாளை மாலை கரையை கடக்கிறது கஜா புயல்!
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் கடலூர் மற்றும் பாம்பன் நடுவே நாளை மாலை கரையை கடக்கிறது. இதையொட்டி புயலால் பாதிக்க வாய்ப்பு உள்ள மாவட்டங்களில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வங்கக்கடலில், அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நவம்பர் 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று கடந்த 11ம் தேதி புயலாக மாறியது.
இந்த புயலுக்கு கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இந்த புயல், கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா நடுவே 15ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
[கஜா வருவது இருக்கட்டும்.. ஆனால் சென்னைக்கு என்ன கிடைக்கும்.. இங்கே வெயிலா இருக்கே!]

நாளை கரையை கடக்கும்
ஆனால் கஜா புயலின் திசை நேற்று முன்தினம் திடீரென மாறியது. இதனால் கடலூர் மற்றும் பாம்பன் நடுவே நாளை மாலையில் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் மற்றும் மழை பீதி காரணமாக, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலும், புதுச்சேரியின், காரைக்கால் மாவட்டத்திலும் நாளை, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் கனமானது முதல் மிகக் கனமானது வரை, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை
சென்னையை பொறுத்த அளவில், வியாழக்கிழமை காலை முதல், மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. புயல் காரணமாக, மீனவர்கள் 15ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை
புயல் காரணமாக, ராமேஸ்வரத்திற்கு செல்லக்கூடிய மற்றும் அங்கிருந்து பிற நகரங்களுக்கு புறப்பட கூடிய ரயில்கள், வியாழக்கிழமை, ரத்து செய்யப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூரில் பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரியாக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன்பாகவே, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், புயலை எதிர்கொள்வது, தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications