கஜா வருவது இருக்கட்டும்.. ஆனால் சென்னைக்கு என்ன கிடைக்கும்.. இங்கே வெயிலா இருக்கே!
Recommended Video

சென்னை: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல். இதனால் சென்னைக்கு மழை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர். காரணம் இங்கு பகலில் வெயில் அடிக்கிறது. ராத்திரியில் பனி கொட்டுகிறது.
வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஜா என்ற புயல் உருவானது. இந்த புயல் தற்போது இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ.தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் நாளை மாலை பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கிறது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதன் வேகம் 10 கி.மீ.ராக அதிகரித்துள்ளது.

வேகம் அதிகரிக்கும்
இதையடுத்து கடலூர்,தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். இரவுக்குள் கஜா புயல் வேகம் பல மடங்கு பெருகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு என்ன கிடைக்கும்
அதேசமயம், இந்த புயலால் சென்னைக்கு என்ன கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தற்போது சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஒரு சொட்டு கூட மழை இல்லை. வெயில்தான் அடிக்கிறது. எனவே மழைக்கான வாய்ப்பு எந்த அளவுக்கு என்பதை இப்போதே கணிக்க முடியவில்லை.

தொலைத்தொடர்பு
இதற்கிடையே நாளை இரவு புயலால் தொலை தொடர்பு துண்டிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.

அனுமதி மறுப்பு
ஆனால் கஜா புயல் மெல்ல வந்து கொண்டு இருக்கிறது. அந்த புயல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுக்கபட்டு உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications