மாண்டஸ் புயல்: டிசம்பர் 8ஆம் தேதி அதி கனமழை.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை மையம் வார்னிங்
சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக டிசம்பர் 8ஆம் தேதி தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6-ம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8-ம் தேதி காலை வடதமிழகம்-புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் வந்தடையக் கூடும்.
05.12.2022 மற்றும் 06.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
08.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்; ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தஞ்சாவூர், நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி) தலா 16, காக்காச்சி (திருநெல்வேலி) 15, நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) 14, மாஞ்சோலை (திருநெல்வேலி) 13, கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர்) 12, நன்னிலம் (திருவாரூர்), வலங்கைமான் (திருவாரூர்), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) தலா 11, திருவையாறு (தஞ்சாவூர்) 10, கும்பகோணம் (தஞ்சாவூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), மன்னார்குடி (திருவாரூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), கொடவாசல் (திருவாரூர்) தலா 9, பாண்டவையார் (திருவாரூர்), திருவாரூர் கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருமானூர் (அரியலூர்), தஞ்சாவூர் PTO, காட்டுமன்னார் கோயில் (கடலூர்), வல்லம் (தஞ்சாவூர்), சீர்காழி (மயிலாடுதுறை) தலா 8, பூதலூர் (தஞ்சாவூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), நாகப்பட்டினம், அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கிளானிலை (புதுக்கோட்டை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 7, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), குருங்குளம் (தஞ்சாவூர்), ஆயின்குடி (புதுக்கோட்டை), மயிலாடுதுறை, திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), மண்டபம் (ராமநாதபுரம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), காரைக்கால் தலா 6, கடம்பூர் (தூத்துக்குடி), லால்பேட்டை (கடலூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), சிவலோகம் (கன்னியாகுமரி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), அரியலூர் (அரியலூர்), துவாக்குடி (திருச்சி), பெரிய அணைக்கட்டு (தஞ்சாவூர்), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), நந்தியார் (திருச்சி), அண்ணாமலை நகர் (கடலூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 5, புள்ளம்பாடி (திருச்சி), பாடலூர் (பெரம்பலூர்), பெரம்பலூர், குழித்துறை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சிதம்பரம் AWS (கடலூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), பாலவீதி (கரூர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), கீரனூர் (புதுக்கோட்டை), கடலூர், பேராவூரணி (தஞ்சாவூர்), கொத்தவாச்சேரி (கடலூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), திருச்சி விமான நிலையம் (திருச்சி), வெள்ளக்கோவில் (திருப்பூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), மணிமுத்தாறு (திருநெல்வேலி) தலா 4, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, பொன்மலை (திருச்சி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), செங்கோட்டை (தென்காசி), வெட்டிகாடு (தஞ்சாவூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), மதுக்கூர் (தஞ்சாவூர்), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கறம்பக்குடி (புதுக்கோட்டை), செட்டிகுளம் (பெரம்பலூர்), சிதம்பரம் (கடலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), நாகுடி (புதுக்கோட்டை), காங்கேயம் (திருப்பூர்), திண்டுக்கல், செந்துறை (அரியலூர்), பாம்பன் (ராமநாதபுரம்), ஆலங்குடி (புதுக்கோட்டை), கொட்டாரம் (கன்னியாகுமரி), சோத்துப்பாறை (தேனி), மலையூர் (புதுக்கோட்டை), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), கொடுமுடி (ஈரோடு), கயத்தார் ARG (தூத்துக்குடி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பொன்னனியாறு அணை (திருச்சி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), அரிமளம் (புதுக்கோட்டை), புவனகிரி (கடலூர்), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) தலா 3, நாகர்கோவில் (கன்னியாகுமரி), பெலாந்துறை (கடலூர்), கன்னியாகுமரி, மணப்பாறை (திருச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), உசிலம்பட்டி (மதுரை), ஊத்துக்குளி (திருப்பூர்), நத்தம் (திண்டுக்கல்), கயத்தாறு (தூத்துக்குடி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), புலிவலம் (திருச்சி), வானமாதேவி (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), லால்குடி (திருச்சி), தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), தேவகோட்டை (சிவகங்கை), சமயபுரம் (திருச்சி), அன்னவாசல் (புதுக்கோட்டை), மயிலாடி (கன்னியாகுமரி), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), மடத்துக்குளம் (திருப்பூர்), குப்பநத்தம் (கடலூர்), தக்கலை (கன்னியாகுமரி), சிறுகுடி (திருச்சி), விருதுநகர், கோவில்பட்டி (திருச்சி), ஆய்க்குடி (தென்காசி), காரைக்குடி (சிவகங்கை), கோடியக்கரை (நாகப்பட்டினம்), ஆண்டிபட்டி (தேனி), கிளாசெருவை (கடலூர்), கள்ளக்குறிச்சி, பண்ருட்டி (கடலூர்), குடிதாங்கி (கடலூர்), தேக்கடி (தேனி), மஞ்சளார் (தேனி), வேப்பூர் (கடலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கள்ளந்திரி (மதுரை), விருதாச்சலம் (கடலூர்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), திருப்பத்தூர் (சிவகங்கை), மருங்காபுரி (திருச்சி), தழுதலை (பெரம்பலூர்), எறையூர் (பெரம்பலூர்), பொள்ளாச்சி (கோவை), அமராவதி அணை (திருப்பூர்), பெரியார் (தேனி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), விருத்தாசலம் Agro (கடலூர்), வம்பன் Agro (புதுக்கோட்டை) தலா 2, விராலிமலை (புதுக்கோட்டை), போடிநாயக்கனூர் (தேனி), கிண்ணக்கொரை (நீலகிரி), தொழுதூர் (கடலூர்), பரமத்திவேலூர் (நாமக்கல்), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), மைலம்பட்டி (கரூர்), சிவகாசி (விருதுநகர்), பர்லியார் (நீலகிரி), பல்லடம் (திருப்பூர்), ஈரோடு, அகரம் சீகூர் (பெரம்பலூர்), கன்னிமார் (கன்னியாகுமரி), காட்டுமயிலூர் (கடலூர்), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), அரண்மனைப்புதூர் (தேனி), சத்தியார் (மதுரை), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), பெருந்துறை (ஈரோடு), துறையூர் (திருச்சி), மாயனூர் (கரூர்), மூலனூர் (திருப்பூர்), கடவூர் (கரூர்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), ராசிபுரம் (நாமக்கல்), பெருங்களூர் (புதுக்கோட்டை), கிருஷ்ணராயபுரம் (கரூர்), தேவிமங்கலம் (திருச்சி), ஆண்டிப்பட்டி (மதுரை), தத்தியெங்கர்பேட்டை (திருச்சி), பெரியகுளம் (தேனி), புலிப்பட்டி (மதுரை), வாடிப்பட்டி (மதுரை), தென்காசி, பெரியகுளம் AWS (தேனி), குன்னூர் PTO (நீலகிரி), பஞ்சப்பட்டி (கரூர்), குளித்தலை (கரூர்), முசிறி (திருச்சி), பீளமேடு (கோவை), எட்டயபுரம் (தூத்துக்குடி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மேலூர் (மதுரை), எறையூர் (கள்ளக்குறிச்சி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), திருமயம் (புதுக்கோட்டை), மணமேல்குடி (புதுக்கோட்டை), கெட்டி (நீலகிரி), கோவை தெற்கு, வீரகனூர் (சேலம்), சத்தியமங்கலம் (ஈரோடு), வைகை அணை (தேனி), கல்லக்குடி (திருச்சி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), திருப்பூர், உடையாளிபட்டி (புதுக்கோட்டை), அவினாசி (திருப்பூர்), மானாமதுரை (சிவகங்கை), வானூர் (விழுப்புரம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), மங்களபுரம் (நாமக்கல்), பழனி (திண்டுக்கல்), மணியாச்சி (தூத்துக்குடி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) , திருநெல்வேலி AWS (திருநெல்வேலி), சிறுகமணி Agro (திருச்சி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அந்தமான் கடல் பகுதிகள் : சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் 05.12.2022, 06.12.2022 நாட்களில் வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் 05.12.2022-07.12.2022 நாட்களில் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் 06.12.2022 அன்று வீசக்கூடும்; காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 07.12.2022 அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் 08.12.2022 அன்று று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

சூறாவளிக்காற்று
தமிழக- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகள் : சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் 08.12.2022 அன்று காலை தொடங்கி காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 08.12.2022 மாலை முதல் 09.12.2022 காலை வரை மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 09.12.2022 மாலை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா பகுதிகள்: 07.12.2022 முதல் 09.12.2022 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications