இன்று முதல் சமையல் சிலிண்டர் விலை குறைப்பு அமல்.. சென்னை சிலிண்டரின் விலை எவ்வளவு?
சென்னை: மகளிர் தினத்தையொட்டி நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ 100 குறைப்பு என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில் அது இன்று முதல் அறிமுகமாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கொண்டுதான் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலை நீடித்து வருகிறது. அதுபோல் வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மட்டும் அவ்வப்போது உயர்ந்தும் குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மார்ச் 1 ஆம் தேதி 19 ரூபாய் உயர்த்தப்பட்டது.
இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ஒன்று ரூ 1,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ 918.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ 100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். மகளிர் தினத்தையொட்டி அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: மகளிர் தினத்தை முன்னிட்டு சிலிண்டர் விலையை ரூ 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு நாடு முழுவதும் பல லட்சம் மக்களின் குடும்ப நிதிச் சுமையை பெருமளவு குறைக்கும்.
குறிப்பாக பெண் சக்திக்கு வலிமை தரும். சமையல் எரிவாயு சிலிண்டரை மேலும் எளிதாக வாங்கும் நிலையை உருவாக்குவதற்கு மூலம் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் உருவாக்கலாம். பெண்களுக்கு வலிமை சேர்ப்போம் என்ற எங்களது வாக்குறுதிக்கு ஏற்பவும் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் இதுவரை ரூ 918.50 க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் இனி ரூ 100 குறைந்து ரூ 818.50 க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கடந்த ஆண்டு ரக்ஷா பந்தனின் போது வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ 200 குறைத்தார் பிரதமர் மோடி.
இந்த நிலையில் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ஏன் 10 ஆண்டுகளாக மகளிர் தினமே வரவில்லையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications