சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு.. 2026ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே வந்த அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்துள்ளது. இதனால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,849.50க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 2 மாதங்களாக சிலிண்டர் விலை குறைந்த நிலையில், புத்தாண்டு தினமான இன்று உயர்ந்துள்ளது. அதேபோல் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் இரு வகையான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகிறது.

Cylinder rate LPG cylinder

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றனர். இதில் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்படும்.

அதன்படி ஜனவரி 1ஆம் தேதியான இன்று சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை குறைந்த நிலையில், தற்போது 2026ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே ரூ.110 உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்து, ரூ.1,849.50க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் வீட்டு பயன்பாட்டுக்கான 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது தொடர்ந்து ரூ.868.50 ஆக நீடித்து வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு ஹோட்டல், டீ கடை உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபடுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+