புழல் எனக்கு நிழல்..வெயிலில் குடை, தாகத்திற்கு நீர், நோய்க்கு மருந்து..டி ஜெயக்குமார் எழுதிய "கவிதை"!
சென்னை: திருச்சியில் தங்கி கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் திருச்சி அதிமுகவினருக்கு நன்றி கூறியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மணலிலே கோட்டை கட்டி விளையாடும் வடசென்னையில் பிறந்த நான், இன்று மலைக்கோட்டை மாநகரில் நின்று பேசுகிறேன். நான் ஏன் இங்கு வந்தேன்? இங்கு என்ன கிடைத்தது? நடந்ததை நாடறியும், ஆனாலும் நினைவூட்டுகிறேன்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வடசென்னையில் ஒரு வாக்குச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை நான் கையும் களவுமாக பிடித்து கொடுத்ததற்கு இந்த திமுக அரசு தந்த பரிசு சிறைவாசம். இம் என்றால் சிறைவாசம்- ஏன் என்றால் வனவாசம் என்றார்கள். ஆனாலும் அஞ்சவில்லை, புழல் எனக்கு நிழலாகத் தான் பட்டது.

சட்ட போராட்டங்கள்
சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்னர் நீதிமன்றம் தந்த பரிசு, திருச்சியில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்று. ஆஹா எப்பேர்ப்பட்ட பரிசு என இங்கு வந்த பின்தான் நான் உணர்ந்து கொண்டேன். மலைக்கோட்டை நகரில் வந்திறங்கிய நாள் முதல் என் மீது நீங்கள் காட்டிய அன்பும், வாஞ்சையும் அளவிட முடியாதது.

அன்பு அரவணைப்பு
விருந்து உபசரிப்பாலும் அன்பு அரவணைப்பாலும் என்னை திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். வெயிலில் குடையாகவும் தாகத்திற்கு நீராகவும் நோய்க்கு மருந்தாகவும் இருந்தது உங்கள் பாசப்பிணைப்பு. ஒட்டுமொத்த திருச்சி மாவட்டமும் திரண்டு வந்து கவனித்துக் கொண்டது என்னை, அறுசுவையை தாண்டியது உங்கள் அன்புச் சுவை.

தென் மாவட்டங்கள்
போதாக்குறைக்கு தென் மாவட்டங்களிலும் இருந்து புறப்பட்டு வந்து திருச்சி மாநகரை திருவிழாவாக மாற்றி விட்டீர்கள். இங்கு தங்கியிருந்த இந்த இரண்டு வாரமும் வரம்பெற்ற வாரங்கள். என் நினைவில் பொன்னெழுத்துக்களால் நிறைந்துவிட்டது திருச்சி மாநகரம்.

ரத்தத்தின் ரத்தங்களே
நிபந்தனையாகத் தான் திருச்சியில் தங்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ புறப்படவே மனமில்லை. என் இரண்டாம் தாய்வீடாக மாறிவிட்ட இந்த திருச்சி மண்ணையும் உங்கள் அன்பையும் நினைத்து விம்மிய நெஞ்சோடு விடை கொடுக்கிறேன். போய் வருகிறேன் மலைக்கோட்டை மாநகரே! மலைக்கோட்டையில் கழக் கொடியை பறக்க விடும் ரத்தத்தின் ரத்தங்களே... நன்றி இவ்வாறு டி ஜெயக்குமார் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்!












Click it and Unblock the Notifications