கூடுது.. குறையுது.. ரிப்பீட்டு! தமிழ்நாட்டில் மீண்டும் ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஜூன் மாதம் முதல் தினசரி கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கியது. தமிழ்நாட்டில் 200-க்கும் குறைவாக இருந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 16 ஆம் தேதி 500-ஐ தாண்டியது.
இப்படி படிப்படியாக அதிகரித்து நேற்று ஒரேநாளில் 771 பேர் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,063 ஆக அதிகரித்து இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,64,131 ஆக அதிகரித்து இருக்கிறது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 497 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் யாரும் இன்று உயிரிழக்கவில்லை. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,026 ஆகவே தொடர்கிறது. அதேநேரம் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,174 ஆக அதிகரித்து இருக்கிறது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 567 பேர் இன்று குணமடைந்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,20,931 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications