டெய்சி பற்றி எங்கேயுமே ஆதவ் அர்ஜுனா பேசவே இல்லையே.. விவாகரத்து குறித்து சேகுவேரா கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், டெய்சி மார்டினும் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இருவரும் பரஸ்பர மரியாதையுடன் பிரிவதாக டெய்சி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவாகரத்து அறிவிப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர், King 360 என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா - டெய்சி

சேகுவேரா அந்த பேட்டியில் பேசும்போது "இருவரும் சுமுகமாக பிரிவதாகவே அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பில் எந்தவிதமான பிரச்சனையும் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. இதை அப்படியே புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில், முதலமைச்சர் விஜய் அனைத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்துவிட்டார் என்று ஆதவ் அர்ஜுனா பேசியதை கவனிக்க வேண்டும்.

Daisy Martin Divorce

சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தார் என்று சொல்வது வேறு. அனைத்தையும் விட்டுவிட்டு வந்தார் என்றால் குடும்பம், உறவுகள், சொத்துகள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டார் என்று பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆதவ் அர்ஜுனாவே ஒரு மேடையில் தனது தொழிலையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு வந்ததாக பேசியிருக்கிறார். ஒருவர் தன்னைப் பற்றி சொல்லிக்கொள்வதை இன்னொருவருடன் ஒப்பிட முடியுமா என்பதுதான் இங்கு எழும் கேள்வி.

ஆதவின் மைத்துனர்

ஆதவ் அர்ஜுனா தனது அம்மாவின் வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள், சாதிய வன்கொடுமைகள், குடும்பத்தின் கடந்தகாலம் என பல விஷயங்களைப் பொதுவெளியில் பேசியிருக்கிறார். ஆனால், தனது மனைவி டெய்சி மார்டின் குறித்து எங்கேயுமே பேசியதில்லை.. குடும்பத்தைப் பற்றி அவரே பொதுவெளியில் பேசியதில்லை..

சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா மீது அவரது மாமனார் குடும்பத்தை முன்வைத்து விமர்சனங்கள் எழுந்தபோதும், அதற்கு அவர் ஒரு வரம்பை வகுத்திருக்கலாம். ஆனால், அந்த விவாதம் தொடர்ந்தபோது, குடும்பத்தினர் பற்றிய கேள்விகளும் எதிர்கேள்விகளும் எழுந்தன.

அடுத்ததாக, ஆதவின் மைத்துனர் சார்லஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும், குடும்பத்தினரைப் பிரிக்க ஆதவ் முயன்றதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளில் ஒன்றுக்காவது ஆதவ் பதில் அளித்திருக்கிறாரா, மறுத்திருக்கிறாரா? இதுவரை பதில் அளிக்காதது ஆதவுக்கு பலவீனமாக அமையலாம். இவை சார்லஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சம்பளம், உழைப்பு

இப்போது ஆதவ் அர்ஜுனா வசதி படைத்தவராக இருக்கிறார். இந்தச் செல்வம் அவருடைய சொந்த உழைப்பால் வந்ததா அல்லது மார்ட்டின் குடும்பத்தின் ஆதரவால் கிடைத்ததா என்ற கேள்வியும் எழுகிறது. தனது தொழில், வருமானம், சம்பளம், உழைப்பு ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை அவர் வெளிப்படையாக விளக்கியிருந்தால் இதுபோன்ற கேள்விகளுக்கு இடமிருக்காது.

இந்த விவாகரத்தின் பின்னணியில் அரசியல், பொருளாதாரம் மற்றும் குடும்பச் சொத்துகள் தொடர்பான சிக்கல்கள் இருக்க வாய்ப்புண்டு.. ஒருவருக்கு எதிராக வருமான வரித்துறை அல்லது வேறு விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தினால், அந்த விசாரணை அவருடைய மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வரைக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது.

பரஸ்பர மரியாதை

சொத்துகள், பணப் பரிவர்த்தனைகள், குடும்பத் தொடர்புகள் ஆகியவையும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்,. அதேநேரத்தில், விவாகரத்து பெற்றுவிட்டதால் ஒருவர் சட்ட விசாரணையிலிருந்து தானாகவே விடுபட்டுவிட முடியாது. அதற்கான சட்ட நடைமுறைகள் தனியாக உள்ளன.

டெய்சி வெளியிட்ட அறிவிப்பில் இருவரும் பரஸ்பர மரியாதையுடன் பிரிவதாகவும், ஒருவருக்கொருவர் எதிர்காலத்தில் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் பிரிவில் குழந்தைகளின் எதிர்காலமும் முக்கியமானது. கணவன், மனைவி இடையிலான பிரச்சினைகளில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படக்கூடும். அதனால், பெற்றோர் தங்களுடைய பிரச்சினைகளை மட்டும் பார்க்காமல், குழந்தைகளின் விருப்பம், வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றெல்லாம் சேகுவேரா தனது பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+