போச்சே! அண்ணாமலை அறிக்கையில் இருக்கும் "அந்த" வார்த்தை.. கவனிச்சீங்களா? பாய்ந்து வந்த திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி சூர்யாவை திமுகவில் இருந்து நீக்குவதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டு இருக்கும் அந்த வார்த்தைதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆடு திருடு போன மாதிரி கனவு கண்டேன் என்று வடிவேலு சொல்வது போலத்தான் திருச்சி சூர்யா - டெய்சி சரண் மோதல் முடிவிற்கு வந்துள்ளது. அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை எல்லாம் பேசிவிட்டு தற்போது திருச்சி சூர்யா - டெய்சி ஆகியோர்.. நாங்கள் அக்கா - தம்பி போல பேசினோம். யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை.

நாங்கள் எங்களுக்குள் பேசி சமாதானம் செய்துவிட்டோம். எங்களுக்கு இடையில் நடந்த மோதலை பெரிதுபடுத்த வேண்டாம், என்று டெய்சி சரண் இந்த விவகாரம் பற்றி சமாதானம் சொல்லி இருக்கிறார்.

நான்தான் அவுட்டா?

நான்தான் அவுட்டா?

கிட்டத்தட்ட இந்த விவகாரத்தில் தற்போது காயத்ரி ரகுராம்தான் அவுட்டாகி இருக்கிறார். டெய்சி சரணுக்கு துணையாக நின்று அவர் போஸ்ட் செய்து வந்தார். பாஜகவில் இருந்து அந்த ஆடியோவை பகிர்ந்து முதல் நிர்வாகி அவர்தான். அதற்கு முன் ஊடகங்களும், திமுக நிர்வாகிகளும் மட்டுமே பகிர்ந்து வந்தனர். காயத்ரி ரகுராம் இந்த ஆடியோவை பகிர்ந்த பின்புதான் அந்த விவகாரம் மிகவும் பெரிதானது. அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய இதுவும் ஒரு காரணமாக இருந்தது. அப்படி இருக்கும்போது டெய்சி சரண் - சூர்யா இருவரும் ராசியாகிவிட்டார்கள். காயத்ரி மட்டும் கட்சி நிர்வாகிகளுக்கு எதிரியாகிவிட்டார் என்று பாஜகவினர் பேசிக்கொள்ள தொடங்கி உள்ளனர்.

அறிக்கையில் என்ன இருக்கிறது

அறிக்கையில் என்ன இருக்கிறது

திருச்சி சூர்யாவை திமுகவில் இருந்து நீக்குவதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டு இருக்கும் அந்த வார்த்தைதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காயத்ரியை சஸ்பெண்ட் செய்யும் போது வெளியிட்ட அறிக்கையில், பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார் கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட செய்தி குறிப்பில். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு நீக்கப்படுகிறார்.

நீக்கம்

நீக்கம்

மாத காலத்திற்கு ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது.

அதே சமயம் திருச்சி சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் திருமதி டெய்சி சரண் அவர்களுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் திரு சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான திரு கனக சபாபதி அவர்களிடம் 22.11.2022 அன்று தெரிவிக்கப்பட்டது.

என்ன சொல்லி இருக்கிறார்

என்ன சொல்லி இருக்கிறார்

இதன் அடிப்படையில், திருப்பூரில் இன்று ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு முன் திரு சூர்யா சிவா மற்றும் திருமதி டெய்சி சரண் ஆகிய இருவரும் ஆஜராகி இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்தனர். அவர்கள் இருவரும் நடந்தவற்றை எல்லாம் மறந்து சகோதரிகளாக பயணிக்க சுமூகமாக சகோதர விரும்புவதாக ஒழுங்கு நடவடிக்கை குழுவினரிடமும் பின் பத்திரிக்கையாளர்களிடமும் தெரிவித்தனர். நடந்தவை மறந்துவிட்டு சுமூகமாக செல்ல அவர்கள் விருப்பப்பட்டாலும் அந்த தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும். பெண்களை தெய்வமாக போற்றும் கட்சி நமது பாரதிய ஜனதா கட்சி. தமிழகத்தில் உள்ள சில திராவிட கட்சிகளை போல் நாமும் பெண்களின் மேல் எய்யப்படும் அவதூறுகளை கண்டும் காணாதவர்களை போல் கடந்து செல்ல மாட்டோம்.

வித்தியாசம்

வித்தியாசம்

பெண்களை பொது மேடைகளில் கொச்சை படுத்துபவர்கள், ஆபாச காணொளியில் காட்சி அளித்தவர்கள், பெண்களை தரக்குறைவாக தொலைபேசியில் பேசியவர்கள், கட்சி கூட்டத்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டவர்கள் போன்றோரின் கூடாரமாக திராவிட முன்னேற்ற கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பெண்களை இழிவுபடுத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது மற்றும் சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன்.

தொண்டன்

தொண்டன்

நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்கவேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது (Burden of Leadership). விளைவிக்கும் செயல்களில் ஆகவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் OBC அணி மாநில பொது செயலாளர் திரு சூர்யா சிவா அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். ஈடுபட்டுள்ளதை அவர் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும், என்று குறிப்பிட்டு உள்ளார்.

வேறுபாடு

வேறுபாடு

காயத்ரி நீக்கம் பற்றிய அறிக்கையில், காயத்ரியுடன் யாரும் தொடர்பில் இருக்க கூடாது என்று அண்ணாமலையே கூறியுள்ளார். ஆனால் சூர்யா அறிக்கையில் "கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். ஈடுபட்டுள்ளதை அவர் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும், என்று குறிப்பிட்டு உள்ளார்." என்று கூறியுள்ளார். சூர்யாவிற்கு மட்டும் என்ன சலுகை இது. அவருக்கு மட்டும் என்ன வாய்ப்பு இது என்று நெட்டிசன்கள், திமுகவினர் விமர்சனம் செய்துள்ளனர். காங்கிரஸ் நிர்வாகி திவ்யா இது தொடர்பாக செய்துள்ள ட்விட்டில், செஞ்சது தவறாம். ஆனால் தண்டனைகள் வெவ்வேறானவையாம். ஆனா மகளிரை போற்றும் கட்சினு பேரு வேற, என்று விமர்சனம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+