"ஜோக்கர்".. திருமாவை திட்டிய காயத்ரி ரகுராம்.. மொத்தமாக குவிந்து பதிலடி கொடுத்த சிறுத்தைகள்!
திருமாவளவனை கடுமையாக சாடியுள்ளார் காயத்ரி ரகுராம்
சென்னை: "ஜோக்கர்".. என்று ஒத்த வார்த்தையில் திருமாவை அசிங்கப்படுத்தி பாஜக ஆதரவாளர் காயத்ரி ரகுராம் ட்விட் ஒன்றினை போட.. மொத்த விசிகவினரும் ஒன்றுதிரண்டு காயத்ரிக்கு பதிலடி தந்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.
டெல்லியில் கலவரம் வெடித்துள்ளது.. அந்த கலவரத்தை அடக்க டெல்லி மாநில போலீசாரும் மத்திய அரசும் மிக மிக தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். யமுனா விஹார் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகதவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என டெல்லி போலீஸ் ஸ்பீக்கர்கள் மூலம் கலவர பகுதிகளில் அறிவித்து வருகின்றனர்.

பதற்றம்
இதுவரை கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 என்று தகவல் வெளிவந்துள்ளது. அப்போது கண்டதும் சுட உத்தரவு என்பது கூடுதல் பதற்றத்தை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இந்தத் தகவலை டெல்லி காவல்துறை மறுத்திருக்கிறது. இன்னொரு பக்கம், ஒரு சில அரசியல்வாதிகள் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

விசிக
இந்த நிலையில் கலவரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்... அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனமும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா பேசிய வெறுப்புப் பேச்சுகள்தான் கலவரம் வெடிக்கக் காரணம்.

அமித்ஷா
இந்தக் கலவரத்துக்கும் உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும்.. காவல்துறை அதிகாரத்தை உள்துறை அமைச்சகத்திடமிருந்து மாற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதேபோல பல்வேறு தலைவர்கள் அமித்ஷாவை பதவி விலக வேண்டும் என்று நெருக்கடி தந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

காயத்ரி ரகுராம்
அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த எல்லாரையும் விட்டுவிட்டு திருமாவை மட்டும் மீண்டும் சீண்டி உள்ளார் காயத்ரி ரகுராம்.. இவர் இப்போது கட்சியில் இருக்கிறாரா இல்லையா என்றுகூட தெரியாத நிலையில், ஒரு ட்விட் போட்டுள்ளார்.. திருமாவளவனின் அறிக்கையை சுட்டிக்காட்டிய காயத்ரி ஒரே ஒரு வார்த்தையில் "ஜோக்கர்" என்று குறிப்பிட்டுள்ளார்.. இதனால் விசிகவினர் மீண்டும் கொந்தளித்துள்ளனர்.
|
ஜோக்கர்
"அப்படின்னா, டெல்லி காவல்துறை அதிகாரத்தை வைத்திருந்த அமித்ஷா என்ன செய்தாரு" என்று கேள்வி கேட்டுள்ளனர்.. ஒத்த வார்த்தையை பதிவட்டு, விசிகவினரிடம் திரும்பவும் அசிங்கப்பட்டு கொண்டு வருகிறார் காயத்ரி ரகுராம்! அதேபோல, வட இந்தியர்களை பற்றி அக்கறை கொள்ளாதது திமுககூட்டணி.. இந்தியாவை இரண்டாக பிரிக்க விரும்புவதுதான் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்.. டெல்லிக்கு முதலை கண்ணீர் வடிக்கிறது" என்று மற்றொரு ட்வீட்டை காயத்ரி ரகுராம் போட.. அதற்குரிய வசவுகளையும் வாங்க கட்டிக் கொண்டு வருகிறார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications