BMWக்கு காத்து அடிக்க வந்த சினிமா டான்ஸ் மாஸ்டர்.. “2 இந்திகாரங்க!” பெட்ரோல் பங்கில் நூதன திருட்டு
சென்னை: பாரத் பெட்ரோல் பங்கில் BMW காருக்கு காத்து அடிக்கும்போது அதில் இருந்த பாகங்களை வட மாநில ஊழியர்கள் திருடுவதாக சினிமா நடன கலைஞர் ஸ்ரீதர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடன கலைஞராக இருப்பவர் ஸ்ரீதர். விஜய், அஜித், சூரியா, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடன கலைஞராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாரத் பெட்ரோல் பங்கிற்கு தனது காரில் அவர் சென்று இருக்கிறார்.
அப்போது காருக்கு காத்து அடித்துக் கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் அவரது கார் டயரில் உள்ள பொருளை எடுத்து மாற்று பொருளை வைத்தபோது அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இது நடந்ததை விளக்கி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீதர் மாஸ்டர் வீடியோ
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் உங்க ஸ்ரீதர் மாஸ்டர் பேசுகிறேன். நான் இங்கு பாரத் பெட்ரோல் பங்கில் இருக்கிறேன். என் ஜிடி பி.எம்.டபிள்யு காருக்கு காற்று அடிக்க வந்தேன். அங்கு 2 இந்திகாரர்கள் காற்று அடித்தார்கள். அப்போது காற்று அடிக்கும் இயந்திரத்தில் ஒரு இடத்தில் ஊழியர் கை வைத்துக்கொண்டே இருந்தார். எதற்க்கு அப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் அதை பார்த்து திறக்க சொன்னேன்." என்று சொல்லி திறந்து காட்டினார்.

உதிரி பாகம் திருட்டு
அப்போது அதற்குள் பல கார்களில் இருந்து ஏராளமான உதிரி பாகங்கள் கழற்றி கிடந்தன. இதை வீடியோவில் காட்டிய டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் தனது பேச்சை தொடர்ந்தார். "அதாவது ஒவ்வொரு பி.எம்.ட்பிள்யு போன்ற விலை உயர்ந்த கார்களின் உதிரி பாகங்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை இருக்கும். இதுகூட பராவாயில்லை. ஆனால், இதை போலியாக மாற்றுகிறார்கள்.

போலி உதிரிபாகம்
நமது காற்று இது. இவ்வாறு செய்வது மிக மிக தவறானது. இது அனைவருக்கும் போய் சேர வேண்டும். இது எனக்காக மட்டும் இல்லை. நான் இந்த இடத்திற்கு இப்படியே காரில் வரவில்லை. சைக்கிளில் தான் வந்தேன். சிறிய சிறிய விசயமாக இருந்தாலும் கஷ்டப்பட்டே எல்லோரும் சம்பாதிக்கிறார்கள். தவறாக விசயத்தை விடக்கூடாது.

காரைவிட்டு இறங்கி பாருங்கள்
எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் காத்து அடிக்கும்போது இறங்கி என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். திரும்பவும் அதை வைக்கிறார்களா என்று பாருங்கள். 4 டயர்களிலும் அது இல்லை என்றால் கார் ஷோரும்களுக்குபோய் அதன் விலை என்னவென்று பாருங்க. இந்த பாகங்கள் எங்கு போகிறது என்றும் தெரியும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications