டான்ஸர் ரமேஷ் முதலும் கடைசியுமாக கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா? 2வது மனைவி இன்பவள்ளி கண்ணீர்
நானும் டான்ஸர் ரமேஷும் 20 ஆண்டுகளுக்கு முன்பே காதலித்தோம்- இரண்டாவது மனைவி இன்பவள்ளி
சென்னை: தானும் டான்ஸர் ரமேஷும் 20 ஆண்டுகளுக்கு முன்பே காதலித்து வந்ததாகவும் அவர்தான் தனக்கு உயிர் என்றும் இரண்டாவது மனைவி இன்பவள்ளி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சென்னை பர்மா பஜாரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது அசாத்திய நடன முறையால் அப்பகுதி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார். மைக்கேல் ஜாக்சன் போல் தனது நடன திறமையுடன் இருந்தார். அவர் பிரபுதேவா போல் நடனமாடுவார்.
இதை கண்ட அந்தப் பகுதி இளைஞர்கள் ரமேஷை ஆட வைத்து அவரது வீடியோக்களை ரீல்ஸ், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர். இதனால் இவரது வீடியோக்களை நிறைய பேர் பார்த்து ரசித்தனர். இதன் மூலம் அவர் டான்ஸர் ரமேஷ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

ஜீ தமிழ் தொலைகாட்சி
இதைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைகாட்சியிலும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கும் மைக்கேல் ஜாக்சன், பிரபுதேவா போல் நடனமாடி ஜட்ஜ்களை அதிர வைத்தார். இதன் மூலம் டான்ஸர் ரமேஷுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அவர் துணிவு, ஜெயிலர் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

10ஆவது மாடி
இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி தனது பிறந்தநாளின் போது அவர் கே.பி பார்க் குடியிருப்பில் 10ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் டான்ஸர் ரமேஷுக்கு இரு மனைவிகள். அதில் முதல் மனைவி பெயர் சித்ரா, இரண்டாவது மனைவி பெயர் இன்பவள்ளி, முதல் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு கடந்த இரு மாதங்களாக இன்பவள்ளியுடன்தான் வசித்து வந்தார். டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதும் இரண்டாவது மனைவியின் வீட்டில்தான்.

மரணத்திற்கு இன்பவள்ளிதான் காரணம்
இதனால் தனது கணவரின் மரணத்திற்கு இன்பவள்ளிதான் காரணம் என அவரது முதல் மனைவி சித்ரா போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து டான்ஸர் மரணத்தை சந்தேக மரணமாக போலீஸார் பதிவு செய்தனர். இது தொடர்பாக இன்பவள்ளியிடம் விசாரணையும் நடத்தினர். அப்போது சம்பவ தினத்தன்று குடிக்க காசு கொடுக்காததால் ரமேஷ் 10 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்கு முன்பே காதல்
இது குறித்து இன்பவள்ளி மேலும் கூறுகையில், நானும் ரமேஷும் 20 ஆண்டுகளுக்கு முன்பே காதலித்து வந்தோம். எனது கணவர் மாரடைப்பால் இறந்ததும் ரமேஷ்தான் எனக்கும் எனது 3 மகள்களுக்கும் பாதுகாப்பாக இருந்தார், அவரால் எங்களுக்கு எந்த வருமானமும் வரவில்லை என்றாலும், பாதுகாப்புக்காக எங்களுடன் வைத்திருந்தோம். அவருக்கு தினமும் நான்தான் சாப்பாடு போடுவேன்.

பண ஆதாயம்
ரமேஷால் எனக்கு பண ஆதாயம் ஏதும் கிடையாது. அவரது முதல் மனைவி சித்ரா அவர் படத்தில் நடித்ததால்தான் அவரை தன்னுடன் வைத்துக் கொள்ள முயற்சித்தார். மற்றபடி ரமேஷ் எங்களுடன்தான் இருந்தார், எனக்கு அவர் என்றால் உயிர், இனி ரமேஷ் இல்லாமல் நான் எப்படி வாழ போகிறேன் என தெரியவில்லை. அவர் போனதும் நானும் இறந்திருப்பேன். ஆனால் என்னை நம்பி 3 மகள்கள் இருக்கிறார்கள். நானும் போய்விட்டால் அவர்களை யார் பார்த்துக் கொள்வது, அந்த காரணத்திற்காகத்தான் நான் உயிருடன் இருக்கிறேன். கடைசியாக துணிவு படத்தில் அவர் நடித்ததற்காக ரூ 7 ஆயிரம் தந்தார்கள். அதை ரமேஷ் என்னிடம் தந்தார். இத்தனை ஆண்டுகளில் அவர் கொடுத்த ஒரே பணம் அந்த ரூ 7000 தான். மற்றபடி நான்தான் அவருக்கு பணம் கொடுத்துள்ளேன். அவரது முதல் தாரத்து மகளின் சடங்கிற்கும் நான்தான் ரமேஷுக்கு பணம் கொடுத்தேன் என்றார் இன்பவள்ளி.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications