மரண பீதியில் "அவருடைய" போன் நம்பரை கொடுத்த டேனியல் பாலாஜி! இப்படியும் கூட யோசிக்க முடியுமா?
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி தன்னுடைய இறப்பு குறித்து முன்கூட்டியே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அது தற்போது தீயாய் பரவி வருகிறது.
48 வயதெல்லாம் சாகுற வயசா! சாதிக்கிற வயசாச்சே! என நடிகர் டேனியல் பாலாஜியின் இறப்பு கலங்கடிக்கிறது. நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி எனும் டிவி சீரியல் மூலம் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் பாலாஜி. பின்னாளில் இவர் டேனியல் பாலாஜி என அழைக்கப்பட்டார். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்து மிரட்டியிருப்பார். அதிலும் வேட்டையாடு விளையாடு படத்தில் இவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. வில்லன் கேரக்டருக்கு டேனியல் பாலாஜியின் பாடி லேங்குவேஜ், மேனரிசம், குரல் ஆகியவை பக்காவாக பொருந்தும்.
இவர் சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளார். தனது தாயின் ஆசைக்காக இந்த கோயிலை அவர் கட்டியிருந்தார். அதன் கும்பாபிஷேகம் கூட கடந்த மார்ச் 9ஆம் தேதிதான் நடைபெற்றது. ஆன்மீகம் மீது அதிக நாட்டத்துடன் இருந்தார்.
இவருக்கு கடந்த 29ஆம் தேதி இரவு 11 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உறவினர்கள் டேனியலை , கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்த இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மருத்துவமனைக்கு சென்றே டேனியலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து டேனியல் பாலாஜி தனது கண்களை தானமாக அளிப்பதாக ஏற்கெனவே எழுதி கொடுத்திருந்ததை அடுத்து அவரது கண்கள் தானமாக பெறப்பட்டன. பின்னர் அவருடைய உடல் அவருடைய பூர்வீக இடமான புரசைவாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. டேனியலின் தாய், மகனின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தோர் மனதை கசக்கி பிழிந்தது.
இதையடுத்து மாலை அவருடைய உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மறைந்த "இதயம்" நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். அவரை போலவே டோனியலும் இளம் வயதில் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். இந்த நிலையில் டேனியல் எப்படிப்பட்டவர் என்பது குறித்து பலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
டேனியல் பாலாஜி எத்தனை திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். திறமையில்லாமல் 48 வயதில் 42 படங்களை அதுவும் இந்த போட்டி மிகுந்த உலகில் நடித்திருக்க மாட்டார். அவர் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவல் நேரத்தில் அந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தேன்.
அப்போது திரும்பி வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் எனது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நான் மருத்துவமனையில் சேர்ந்த 4 ஆவது நாள் இறக்கும் தருவாய்க்கு சென்று கடவுளின் கருணையால் மீண்டு வந்தேன். பிறப்பு இருந்தால் இறப்பு என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும்.
கொரோனா தாக்கிய போது என் நண்பனை அழைத்து வீட்டுச் சாவியை கொடுத்தேன். ஒரு சில தொலைபேசி எண்களை அவரிடம் கொடுத்து நான் இறந்துவிட்டால் அந்த தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கூறியிருந்தேன். எனக்கு கடைசி கட்டம் என தெரிந்தும் நான் பதறுவதால் ஒன்றும் ஆக போவதில்லை. நிதானமாக செயல்பட்டேன் என தெரிவித்திருந்தார். தனது நண்பருக்கு யாருடைய போன் நம்பரை டேனியல் கொடுத்தார் என தெரியவில்லை. ஒரு வேளை உறவினர்களின் போன் நம்பராக இருக்கலாம்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications